ஹாஸ்பிஸ் கேர்: புதிய இடம், புதிய சலுகை: சேவை எல்லாம் இலவசம்

ஹாஸ்பிஸ் கேர்: புதிய இடம், புதிய சலுகை: சேவை எல்லாம் இலவசம்

2 mins read
d8364301-f340-4919-9b2b-de5c94aa3916
குவோங் வாய் ‌ஷு மருத்துவமனையில் 'எச்சிஏ' நிறுவனத்தின் புதிய கட்டடத்தில் திருவாட்டி மோங் டீ, 77, திரு ஹுன் தோங் போங், 80, ஆகிய இரு நோயாளிகளிடம் சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் உரையாடுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் 3,500க்கும் அதிக நோயாளிகளுக்கு ஆண்டுதோறும் சிகிச்சை அளிக்கின்ற, சுமார் 37,000 தடவை வீடுகளுக்குச் சென்று சேவை வழங்குகின்ற எச்சிஏ (HCA) ஹாஸ்பிஸ் கேர் நிறுவனம், சிராங்கூன் ரோட்டில் உள்ள குவோங் வாய் ‌ஷு மருத்து வமனைக்கு இடமாறியது.

இதனையொட்டி அந்த நிறு வனம் தான் வழங்கும் அனைத்து சேவைகளுக்கும் உரிய கட்டணத் தைத் தள்ளுபடி செய்கிறது.

இந்தச் சேவை நிறுவனம் ஜாலான் டான் டோக் செங்கில் அமைந்திருந்தது. அது 2018 நவம் பரில் இடம் மாறியது.

இந்த ஆண்டு ஜனவரி முதல் நோயாளிகளை அவர்களின் வீடு களுக்கு இலவசமாகக் கொண்டு சேர்க்கும் சேவையையும் இது தொடங்கியது.

நோயாளிகளுக்கும் பகல் நேர பராமரிப்பு தேவைப்படுவோருக்கும் அவர்களின் வீடுகளிலும் தன் இடத்திலும் இந்த அறநிறுவனம் சேவை வழங்கி வருகிறது.

'எச்சிஏ' சேவை வழங்கும் நோயாளிகள், முற்றிய நோயுடன், ஓராண்டுகூட உயிர் வாழ முடியாத சூழலில் இருப்பவர்கள்.

சிங்கப்பூரில் இத்தகைய நோயாளிகளுக்காகச் செயல்படும் நான்கு பகல் நேர சேவை நிலை யங்களில் இரண்டு நிலையங்களை இந்த நிறுவனம் நடத்தி வருகிறது.

ஆண்டுதோறும் சுமார் 240 வாடிக்கையாளர்களுக்குச் சேவை வழங்குகிறது. இதன் புதிய இடத்தை நேற்று சுகாதார அமைச் சர் கான் கிம் யோங் அதிகாரபூர்வ மாகத் திறந்துவைத்தார்.

கட்டுபடியாகக்கூடிய, தரமான இத்தகைய பராமரிப்புச் சேவைகள் கிடைக்க வேண்டியதன் முக்கியத் துவம் பற்றி அமைச்சர் தமது உரையில் வலியுறுத்தினார்.

புதிய இடத்தில் இந்த அமைப்பு இப்போது 45 நோயாளிகளுக்கு இடமளிக்க முடியும். நாள்தோறும் வந்து செல்லும் சராசரி 30 நோயாளிகளுக்கும் இது சேவை வழங்க முடியும்.

"புதிய இடத்துக்கு நாங்கள் மாறினாலும் எங்கள் இலக்கு மாறவில்லை. தொடர்ந்து நாங்கள் எங்கள் நோயாளிகளுக்கும் அவர் களின் குடும்பத்தாருக்கும் அணுக்கமாக இருந்து வருவோம்.

"வீடுகளுக்கு நேரடியாகச் சென்று சேவை வழங்குவோம்," என்று இந்தப் பராமரிப்பு நிறு வனத்தின் தலைவர் டாக்டர் டான் போ கியாங் தெரிவித்தார்.