சிங்கப்பூரில் அரசாங்கத்திற்கும் மக்களுக் கும் இடையில் நம்பிக்கையைப் பேணி வளர்ப்பதில் கலந்துரையாடல் முக்கிய பங்காற்றுவதாக துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்து இருக்கிறார்.
பங்காளித்துவ உறவும் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்போதுமே நிறைவேற்றி வருவதும் அந்த நம்பிக்கை யைப் பலப்படுத்த உதவும் இதர அம்சங்கள் என்றார் அவர்.
இது, சிங்கப்பூரை நிறுவிய பிரதமர் லீ குவான் இயூ விட்டுச் சென்றிருக்கும் வழிமுறை என்று அவர் கூறினார்.
தன்னால் நிறைவேற்ற முடியாத வாக் குறுதிகளைத் தேர்தலின்போது அரசாங் கம் வழங்கவே கூடாது என்று திரு லீ வலியுறுத்தி வந்ததாக அவர் கூறினார்.
"நம்பகத்தன்மை மிக முக்கியமானது. கொடுத்த வாக்குறுதியைக் காக்க முடிந்த வரை அனைத்தையும் செய்யவேண்டும்," என்று திரு லீ குவான் இயூவின் முதன் மைத் தனிச் செயலாளராக இருந்து வந்த திரு ஹெங் கூறினார்.
சுவிட்சர்லாந்தில் நடந்த 49வது செயிண்ட் கேலன் கருத்தரங்கில் துணைப் பிரதமர் கலந்துகொண்டார். சிங் கப்பூர் அரசாங்கம் அதனுடைய குடிமக் களுடன் நம்பிக்கையை எப்படி பலப்படுத்து கிறது என்று கேட்கப்பட்டபோது அதற்குப் பதிலளித்த திரு ஹெங் அப்போது இவ்வாறு தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாரா வாரம் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். 'நமது சிங்கப்பூர் கலந் துரையாடல்' போன்ற நடைமுறைகளும் உள்ளன. இவற்றின் மூலம் மக்களுடன் கலந்துரையாடலும் கலந்துறவாடலும் பலப் படுத்தப்படுவதாக நிதி அமைச்சருமான திரு ஹெங் குறிப்பிட்டார்.
அடுத்த சுற்று கலந்துரையாடல்கள், பிரச்சினைகளைச் சந்திக்கும்போது அவற் றுக்குப் பொறுப்பு எடுத்துக்கொள்ளக் கூடிய மனப்போக்கை மக்களிடம் ஏற் படுத்துவதில் ஒருமித்த கவனத்தைச் செலுத்தக்கூடியவையாக இருக்கும் என்று திரு ஹெங் நம்பிக்கைத் தெரிவித்தார்.
நம்பிக்கையைப் பலப்படுத்துவதில் பங் காளித்துவ உறவும் சம்பந்தப்பட்டு இருக் கிறது என்று குறிப்பிட்ட துணைப் பிரதமர், சிங்கப்பூரின் முத்தரப்பு ஏற்பாட்டு முறை இதற்கு எடுத்துக்காட்டு என்றார்.
நம்பகத்தன்மை முக்கியம் என்ற அவர், கொடுத்த வாக்குறுதியை எப்பாடுபட்டும் காக்க வேண்டும் என்று கூறினார்.
திரு ஹெங், சுவிட்சர்லாந்திற்கான ஐந்து நாள் ஆய்வு பயணத்தின் ஒரு பகுதியாக அந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டார். நிறுவனங்களுக்கும் ஆய்வு அமைப்புகளுக்கும் அவர் சென்றார்.
அரசாங்கம் தன் சொந்த நலத்திற்காக பொருளியல் வளர்ச்சியை, புத்தாக்கத்தைத் தொடர்வதில்லை என்றும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காகவே அரசாங்கம் அதைச் செய்வதாகவும் திரு ஹெங் குறிப்பிட்டுள்ளார்.

