சுடச் சுடச் செய்திகள்

சமூக மருத்துவத் தொண்டர்கள் சிறப்பிப்பு 

சிங்கப்பூரில் சமூக மருத்துவச் சேவை தொடங்கப்பட்டு 70 ஆண்டுகள் ஆவதைக் குறிக்கும் வகையில் நேற்று சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் நடந்த நிகழ்ச் சியில் பழுத்த அனுபவம் வாய்ந்த இரண்டு சமூக மருத்துவ தொண் டர்கள் சிறப்பிக்கப்பட்டனர். 

திரு பீட்டர் லீ, 79, அவர்களில் ஒருவர். இவர் டான் டோக் செங் மருத்துவமனையில் 1960களில் சமூகப் பணியில் தன் வாழ்க்கைத் தொழிலைத் தொடங்கினார்.

திருவாட்டி சரோ பாலகிருஷ் ணன், 76, நேற்றைய நிகழ்ச்சியில் சிறப்பிக்கப்பட்ட மற்றொரு சமூக மருத்துவ ஊழியர். 2003ல் சார்ஸ் தொற்றுநோய் கடுமையாக பரவி யது. 

அந்தக் காலகட்டம்தான் தம் வாழ்வில் தான் சந்தித்த மிகவும் சவால்மிக்க காலகட்டங்களில் ஒன்று என்று இவர் குறிப்பிட்டார்.

திருவாட்டி பாலகிருஷ்ணன், இப்போது தேசிய சிறுநீரக அற நிறுவனத்தில் சமூகப் பராமரிப்பு ஆலோசகராகச் சேவை வழங்கு கிறார் முன்னோடி தலைமுறை மற் றும் மெர்டேக்கா தலைமுறை மேல் முறையீட்டுக் குழு உறுப்பினராக வும் உள்ளார்.

ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங், சட்ட, சுகாதார மூத்த துணை அமைச்சர் எட்வின் டோங், ஆகி யோருடன் சுமார் 200 சமூக மருத் துவ ஊழியர்களும் நேற்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 

மருத்துவமனையில் தங்கி பரா மரிப்பு தேவைப்படுகின்ற, ஆனால் அதற்கான செலவைத் தாங்க முடியாத நிலையில் இருக்கின்ற சிங்கப்பூரர்களுக்கு உதவி அதன் மூலம் இத்தகைய சமூக மருத்துவ தொண்டர்கள் மனிதாபிமானத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் என்று நிகழ்ச்சியில் பேசிய திரு கோ குறிப்பிட்டார். 

சமூக மருத்துவச் சேவையின்     70வது ஆண்டைக் குறிக்கும் வகை யில் நேற்று நடந்த 

நிகழ்ச்சியில் அந்தச் சேவை முன்னோடிகளுடன் ஓய்வு பெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங் கேக் வெட்டி மகிழ்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon