குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையத்தின் 24 மணி நேர ஒருங்கிணைந்த சேவை மையம் அமைக்கும் திட்டத்தின் மூலம் கடவுச்சீட்டுகள், அடையாள அட்டைகள் போன்றவற்றைப் பெற்றுக்கொள்வது எளிதாக்கப் படவுள்ளது.
இத்தகைய தேவைகளுக் காக சிங்கப்பூரர்கள் 2023ஆம் ஆண்டுக்குள்ளாக சுய சேவைக் கூடங்களைப் பயன் படுத்த இயலும். குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணைய அதிகாரிகளை அணுகி இது போன்ற சேவைகளைத் தற் போது பெற வேண்டியுள்ளது. சுயசேவைக் கூடங்களை அமைத்த பிறகு சுமார் 15 நிமிடங்களுக்குள் ஆவணங் களைப் பெற்றுக்கொள்ளலாம்.
நேற்று நடைபெற்ற ஆணை யத்தின் வருடாந்திர பணித் திட்டக் கருத்தரங்கில் பேசிய உள்துறை, சட்ட அமைச்சர்
கா. சண்முகம், ஆணையம் தற் போது அமைந்திருக்கும் கட்ட டத்துக்கு அருகில் புதிய 10 மாடிக் கட்டடத்தில் இந்த நிலையம் அமைக்கப்படும் என் றார்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழக கலாசார மையத்தில் நடைபெற்ற கருத்தரங்கில், 'என்சிசி' எனப்படும் 'முற்றிலும் புரட்சிகரமான' குடிநுழைவுத் திட்டம் பற்றியும் விவரங்களை வெளியிட்டார். இந்தப் புதிய திட்டம் பயோமெட்ரிக், தரவுப் பகுப்பாய்வு போன்றவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் விமான நிலையங்கள், சோதனைச் சாவடிகளில் குடிநுழைவு நடை முறைகள் விரைவுபடுத்தப்படும் என்றார். அதிகரித்து வரும் பயணிகள், சரக்குகளின் அளவு, சுருங்கி வரும் ஊழியரணி ஆகிய எதிர்காலச் சவால்களைச் சமா ளிக்க ஆணையம் தொழில்நுட்பத் தைப் பயன்படுத்துவதைத் திரு சண்முகம் பாராட்டினார்.

