கர்ப்பிணியின் காரில் ‘நகர்வலம்’ வந்த பாம்பு 

திருமதி கெசண்ட்ரா டான், 36, என்ற ஆறு மாத கர்ப்பிணி, கடந்த வியாழக்கிழமை இரவு 11.50 மணிவாக்கில் பாசிர் ரிஸ்ஸிலிருந்து மெய் சின் ரோட் டில் இருக்கும் தன்னுடைய வீட் டிற்கு காரை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். வழியில் அவர், தன் வாகனத்தின் முன்பகுதியில் ரப்பர் குழாய் போன்று ஏதோ ஒன்று நீட்டிக்கொண்டு இருப்பதைப் பார்த்து தண்ணீரை துடைக் கும் சாதனத்தின் மூலம் அதை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். 

மீண்டும் மீண்டும் அது மேலெழும்பியது. உற்றுப்பார்த்த அவர், அது ஒரு பாம்பு என்பதை அறிந்தபோது என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தார்.  

உடனடியாக, கைபேசி வழி யாகக் கணவரிடம் விவரத்தைச் சொன்னார். ஆனால், அவரது கணவர் முதலில் அதை நம்பவில்லை. காரை நிறுத்தாமல் தொடர்ந்து ஓட்டிச் சென்றார் திருவாட்டி டான். வீட்டிற்குச் சென்றதும் தம் கணவருடன் சேர்ந்து பாம்பைத் தேடினார் அவர். அது காரின் உள்ளே மறைந்து கொண்டது. அக்கம்பக்க போலிஸ் சாவடியைத் தொடர்புகொண்ட திருவாட்டி டானை, தேசிய பூங்காக் கழக அதிகாரிகள் பின் னர் தொடர்புகொண்டனர். 

இதனிடையே, அத்தம்பதியர் பக்கத்தில் உள்ள பெட்ரோல் நிலையத்திற்கு காரை ஓட்டிச் சென்று வெளிச்சத்தில் பாம்பைத் தேடினர். ஆனால் அது தென்படவில்லை. 

கடைசியாக அவர்கள் காரை ஓட்டிக்கொண்டு வீட்டுக்குத் திரும்பியபோது பாம்பு முன்பக்கக் கண்ணாடியில் தலையைக் காட்டியது. அப்போது நள்ளிரவு மணி 1 ஆகிவிட்டது. அத்தம்பதியர் அந்தப் பாம்பை ஓர் அட்டைப் பெட்டியின் அடியில் பிடித்து வைத்திருந்தனர். தேசிய பூங்காக் கழக ஊழி யர்கள் அதை எடுத்துச் சென்றனர். பாம்பு சுமார் 1 மீட்டர் நீளம் இருக்கும் என்று கூறப்பட்டது. 

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon