சுகாதாரப் பராமரிப்பு: அதிக வசதி பெற கூடுதல் செலவு

சுகாதாரப் பராமரிப்பு: அதிக வசதி பெற கூடுதல் செலவு

2 mins read
15775e47-3cd5-437b-8445-46fd4db0e20a
டெக் கீயில் ரென் சி மருத்துவமனை தாதிமை இல்லத் திறப்பு நிகழ்வின்போது அங்கிருந்த இல்லவாசிகளுடன் பிரதமர் லீ உரையாடினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் சுகாதாரப் பரா மரிப்பை வழங்கும் கட்டமைப்பு தனிச்சிறப்பு வாய்ந்தது. அடிப் படை சுகாதாரப் பராமரிப்பையும் உள்நோயாளி பராமரிப்பையும் அரசாங்கம் வழங்கிவரும் அதே வேளை இடைநிலைப் பராமரிப்பை சமூகப் பராமரிப்புப் பங்காளிகள் அளித்து வருகின்றனர்.

அரசாங்கம் அத்தகைய பங்காளிகள் சுகாதாரப் பராமரிப்பை நிறுவி, நிதியளித்து, இயக்குவதற்கும் இடைநிலைப் பராமரிப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கும் அரசாங்கம் உதவுகிறது.

இவ்வாறு செய்வதன் மூலம் பராமரிப்புச் சேவைகளை சமூகத்திற்கு நெருக்கமாகக் கொண்டு வர இயலும்.

இந்த வகையான ஒத்துழைப்பு முறை சுகாதாரப் பராமரிப்புச் செலவுகளை கட்டுப்படியாகக்கூடியனவாக வைத்துள்ளது என பிர தமர் லீ சியன் லூங் குறிப்பிட்டார்.

டெக் கீயில் ரென் சி மருத் துவமனையின் புதிய தாதிமை இல்லத்தின் அதிகாரபூர்வ திறப்பு விழாவில் பங்கேற்றுப் பேசுகை யில் பிரதமர் இதனைக் குறிப் பிட்டார்.

ரென் சி @அங் மோ கியோ என்றழைக்கப்படும் புதிய தாதிமை இல்லத்தில் 472 படுக்கைகள் இருக்கும் பராமரிப்பு இல்லவாசி கள் தங்களது அன்றாடத் தேவை களை நிறைவேற்றுவதில் தனித் தும் சுதந்திரமாகவும் இயங்க அனுமதிக்கும் வகையில் இல்லம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. மேலும் ரென் சி மருத்துவமனை யின் 25ஆம் ஆண்டு நிறைவில் தாதிமை இல்லம் திறக்கப்பட்டு உள்ளது.

இடைநிலைப் பராமரிப்பை வழங்குவதில் ரென் சி போன்ற சமூகப் பராமரிப்புப் பங்காளிகள் மிகவும் இன்றியமையாதவர்கள் என்று பிரதமர் லீ தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், "வீட்டின் அருகில் நன்கு பழக் கப்பட்ட சுற்றுப்புறத்திலும் தங் களுக்குத் தெரிந்த, தாங்கள் நேசிக்கும் மக்கள் குழுவுடனும் சிங்கப்பூரர்களுக்குப் பராமரிப்பு வழங்கி வருகிறார்கள் அவர்கள்.

"இதன்மூலம் பராமரிப்புச் சேவைகள் அதிகம் நாடக்கூடிய ஒன்றாக அமைகிறது. அத்துடன் நோயாளிகளுக்கும் பராமரிப் பாளர்களுக்கும் அதிக வசதி களும் கிடைக்கின்றன. ஏற் கெனவே மனரீதியான ஆதரவை யும் சமூக ஆதரவையும் அதிகம் பெற்றிருக்கும் அவர்கள் செலவு மிக்க வசதிகளைத் தவிர்க்கவும் இது உதவுகிறது," என்றார் திரு லீ.

"இந்தப் புதிய வசதி மகிழ்ச்சி தருகிறது. இதற்காகத்தான் கடந்த பத்தாண்டு காலமாக அடிப்படை, இடைநிலை, நீண்ட காலப் பராமரிப்புத் துறைகளுக் கான மொத்த செலவுகளை நான்கு மடங்கு அதிகரித்து வந்துள்ளோம்," என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

2019-05-12 06:00:00 +0800