காலாங் வட்டாரத்தின் வரலாற்றை எடுத்துரைக்கும் புதிய 3 கிலோ மீட்டர் நடைபாதை 18 நில அடை யாளங்களுடன் மக்களுக்கு கடந்த கால, நிகழ்கால நிலவரங் களை எடுத்துக்கூறி விளக்க இருக்கிறது.
விளையாட்டு, கலை, பாரம்பரி யம் ஆகியவற்றைப் பறைசாற்றும் அந்தப் பாதை, சிங்கப்பூரின் 200வது ஆண்டு நிறைவை ஒட்டி நேற்று திறக்கப்பட்டது.
புதிய பாதை மூன்று பகுதி களைக் கொண்டது. காலாங் ஆறு நெடுகிலும் இருக்கும் நீர் முகப்புப் பாதை, தேசிய விளை யாட்டு அரங்கைச் சுற்றி இருக் கும் விளையாட்டரங்கப் பாதை, 'ஓசிபிசி அரீனா' அரங்கம் முதல் சிங்கப்பூர் உள்ளரங்கம் வரைப் பட்ட பகுதியை உள்ளடக்கி இருக்கும் பூங்கா பாதை ஆகி யவை அந்த மூன்று பகுதிகள்.
அந்தப் பாதை, 18 பாரம்பரிய அடையாளச் சின்னங்கள், கலைப்பொருட்கள், கட்டடக் கலைகள் புதிய கலைப்படைப்பு கள் வழியாக அந்த வட்டாரத்
தின் வரலாற்றை எடுத்துரைக்கும்.
காலாங் வட்டார பாரம்பரி யத்தையும் அந்த வட்டார கலை ஞர்களையும் கொண்டாடும் வகையில் சிங்கப்பூர் விளையாட்டு மைய ஏற்பாட்டில் அந்தக் கலைப்படைப்புகள் உருவாகி இருக்கின்றன.

