5 பேரில் 4 தாய்மார்களிடம் மனப்புழுக்கம், குற்ற உணர்வு

5 பேரில் 4 தாய்மார்களிடம் மனப்புழுக்கம், குற்ற உணர்வு

2 mins read
559415de-8485-453b-9eef-066760625ef4
வலமிருந்து: ஜாலான் பெர்சேவில் உள்ள தங்கள் இல்லத்தில் திருமதி தக்‌ஷியா ரசாக், 56, அவரின் கணவரான முகம்மது ஜஃபார், 54, இவர்களின் பிள்ளைகளான அகம்மது இஷ்னின், 15, முகம்மது இஸ்கந்தர், 17, சுலைமான் ஜஃபார், 19, நூருல் அமலினா, 22, மைமுனா பிந்தி முகம்மது ஜஃபார், 21, அயூப் முகம்மது ஜஃபார், 13, ஆகியோர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்   -

சிங்கப்பூர் தாய்மார்களில் ஐந்து பேரில் நால்வர், தாங்கள் பெற் றெடுத்த பிள்ளைகளை மனநிறை வான முறையில் கவனிக்க முடியவில்லையே, போதிய நேரமில் லையே என்ற குற்ற உணர்வுடன், மனப்புழுக்கத்துடன் உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

பல வயதுள்ள பிள்ளைகளின் தாய்மார்கள் 800 பேரை உள்ளடக்கி 'ஃபோகஸ் ஆன் ஃபேமிலி சிங் கப்பூர்' என்ற அமைப்பு சென்ற மாதம் அந்த ஆய்வை நடத்தியது.

வாரம் சில முறை, அன்றாடம் பல முறை தங்களுக்கு கவலையும் பதற்றமும் ஏற்படுவதாக 10 தாய் மார்களில் ஆறு பேர் கூறினர்.

10 பேரில் ஏழு பேர் தங்களுக்கு கோபமும் சலிப்பும் ஏற்படுவதாகத் தெரிவிக்கிறார்கள். ஒரு தாய் என்ற முறையில் நண்பர்களும் குடும்பத்தாரும் நினைக்கும் அள விற்குத் தாங்கள் நடந்துகொள் வதாகச் சுமார் 70 விழுக்காட்டினர் கூறினர். பாதி பேர் தங்களுக்கு நேரடியாகத் தெரிந்த அல்லது சமூக ஊடகத்தின் மூலம் பழக்க மான இதர தாய்மார்களுடன் தங் களை ஒப்பிட்டுக் கொள்கிறார்கள்.

இந்த ஆய்வு முடிவுகள் இதர சமூக சேவை அமைப்புகள் நேரடி யாக காணும் நிலவரங்களுடன் ஒத்து இருக்கின்றன. முந்தைய தலைமுறைகளுடன் ஒப்பிடுகை யில் தாய்மை அடைந்தபின் முன் னதாகவே தாய்மார்கள் இப்போது இந்தக் குற்ற உணர்வை அனுப விப்பதாகத் தெரிகிறது என்று 'டச் ஃபேமிலி' என்ற அமைப்பில் மூத்த ஆலோசகராக உள்ள திரு வாட்டி எலிசியா டான் கூறினார்.

பெண்கள் இப்போது பல வேலைகளை மேற்கொள்கிறார்கள். அவர்களிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்கப்படுகின்றன. இது இந்த நிலைக்குக் காரணமாக இருக்கலாம் என்றார் அவர்.

பல தாய்மார்களும் சவால்மிக்க வாழ்க்கைத் தொழில்களை மேற் கொண்டுள்ளனர். தங்கள் பெற் றோர்களைக் கவனித்துக்கொள் கிறார்கள். சிலர் மேற்படிப்பைத் தொடர்கிறார்கள்.

தாய்மார்களிடம் காணப்படும் இத்தகைய மனப்புழுக்கம் ஒரு குறைபாடு அல்ல. இதை அசா தாரண மனநிலை என்று கரு தக்கூடாது என்று திருவாட்டி அனுசுயா பிரித்விராஜ் தெரிவிக் கிறார். இவர் மனநலக் கழகத்தில் மூத்த மருந்தக உளவியல் துறை வல்லுநராக இருக்கிறார்.

இருந்தாலும் மனப்புழுக்கம் உடல், மனநலத்துக்கு நல்லதல்ல என்பதை மாதர்கள் புரிந்துகொள்ள வேண்டியது முக்கியம் என்பதை இவர் சுட்டினார்.

மாதர்களிடம் காணப்படும் இத்தகைய குற்ற உணர்வு உலகம் முழுவதுமே காணப்படும் ஒரு நிலவரமாக இருக்கிறது.

சிறு வயது தாய்மார்களை மட்டுமின்றி முதிய வயது பிள்ளை களை உடைய தாய்மார்களிடத் திலும் இந்த உணர்வு காணப் படுகிறது என்று அவர் கூறினார்.