மோசடி விவகாரங்களில் ஈடுபட்டு இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் 84 பேரை போலிஸ் விசாரித்து வருகிறது.
வர்த்தக விவகாரப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளும் ஏழு போலிஸ் பிரிவு அதிகாரிகளும் கடந்த திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை நடத்திய ஐந்து நாள் சோதனைகளில் 14 முதல் 78 வயது வரையுள்ள 55 ஆடவர்களும் 29 மாதர்களும் பிடிபட்டனர்.
பிடிபட்ட சந்தேகப்பேர்வழிகள் 211 மோசடி விவகாரங்களில் சம் பந்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அந்த மோசடிகளுக்கு இலக் கானவர்கள் $198,000க்கும் மேற் பட்ட தொகையை இழந்துள்ளனர்.
ஏமாற்றியது அல்லது கள்ளப் பண விவகாரம் தொடர்பில் இவர் களிடம் விசாரணை நடக்கிறது.
ஏமாற்றியதாகக் கூறும் குற்றச் சாட்டின் பேரில் குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டால் ஒருவருக்கு 10 ஆண்டு வரை சிறை மற்றும் அபராதம் விதிக்க முடியும்.
கள்ளப் பணம் விவகாரம் தொடர்பில் குற்றவாளி என்று தீர்ப்பானால் 10 ஆண்டு வரை சிறை, $500,000 வரை அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக கிடைக்க சட்டத்தில் இடமுண்டு.
இணையம் வழியாகப் பொருட் களையும் சேவைகளையும் கேட்டு வாங்கும்போது மிகவும் எச்சரிக் கையுடன் நடந்துகொள்ளும்படி பொதுமக்களுக்கு அதிகாரிகள் ஆலோசனை கூறியிருக்கிறார்கள்.
வங்கிக் கணக்குகள், கைபேசி எண்கள் முதலானவற்றை முன் பின் தெரியாத யாருக்கும் கொடுக் காமல் பொதுமக்கள் நடந்து கொள்ளவேண்டும்.
யாருடைய கணக்காவது சட்ட விரோத பட்டுவாடாக்களுக்குப் பயன்படுத்தப்பட்டால் அவர்கள் அப்பாவியாக இருந்தாலும் பிரச் சினைகளைச் சந்திக்க நேரிடும் என்று அதிகாரிகள் எச்சரித்து இருக்கிறார்கள்.
மலிவான விலையில் கிடைப்ப தாகவும் உண்மை என்று நம்பும் வகையிலும் இணையத்தில் இடம் பெறக்கூடிய விளம்பரங்களைக் கண்டு ஏமாந்துவிடக்கூடாது.
உள்ளூர் வங்கிக் கணக்கு களைப் பயன்படுத்தும் தில்லு முல்லு பேர்வழிகளின் வலைகளில் விழுந்துவிடாதீர்கள்.
முன்பணம் தருவதைத் தவிர்த் துக்கொள்ளுங்கள் என்று பொது மக்களுக்கு போலிஸ் ஆலோசனை கூறி இருக்கிறது.
மோசடி தொடர்பில் தகவல்கள் தெரிந்தவர்கள் 1800-722-6688 என்ற எண்ணில் அல்லது www.scamalert.sg என்ற முகவரியில் தொடர்புகொள்ளலாம்.
இத்தகைய குற்றச்செயல்கள் தொடர்பில் தகவல்களைத் தெரி விக்க விரும்புபவர்கள் 1800-255-0000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவேண்டும். அல்லது www.police.gov.sg/iwitness என்ற முகவரியைப் பயன்படுத்தலாம்.

