பச்சை விளக்கின்போது நின்று சிவப்பு விளக்கு எரிந்தபோது சென்ற கார்; நூலிழையில் தப்பியது

அலெக்சாண்ட்ரா ரோட்டில் சிவப்பு விளக்கை மீறிச் சென்ற ஒரு கார் எந்த வாகனத்தின் மீதும் மோதி விபத்துகளை ஏற்படுத்தாமல் நூலிழையில் தப்பியது.

அலெக்சாண்ட்ரா ரோடும் லெங் கீ ரோடும் சந்திக்கும் இடத்தில் சிவப்பு விளக்கு எரிந்தபோது ஒரு கார் அதை மீறிச் சென்றதைக் காணொளிப் படம் காட்டியது.

ஃபேஸ்புக் பயனாளரான எடி டான், 32, இரண்டு காணொளி களைப் பதிவேற்றி இருந்தார்.

வெள்ளைநிற பிஎம்டபிள்யூ கார், அலெக்சாண்ட்ரா ரோட்டில் வெள்ளிக்கிழமை மாலை நேரத் தில் ஒரு சாலை சந்திப்பில் பச்சை விளக்கு எரிந்தபோதும் நின்று கொண்டே இருந்தது.

திரு டானும் அவருடைய நண் பரும் அந்த வெள்ளைநிற காரை அணுகி அதனுடைய ஓட்டுநரிடம் பேசினார்கள். அதற்குள்ளாக போக்குவரத்து விளக்கு சிவப்பு நிறத்திற்கு மாறிவிட்டது.

இருந்தாலும் அந்த வெள்ளை நிற கார் சிவப்பு விளக்கை மீறிச் சென்றது. அப்போது பல திசை களிலிருந்தும் வாகனங்கள் வேக மாக வந்து கொண்டிருந்தன. என் றாலும் நல்லவேளையாக விபத்து ஏதும் நிகழாமல் அந்த பிஎம்டபிள்யூ கார் தப்பிவிட்டது.

இந்தச் சம்பவத்தைக் காட்டும் காணொளி Roads.sg என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்டது. காணொளி படத்தை எடுத்தவர் போலிசிடம் புகார் தெரிவிக்கவேண்டும் என்று ஃபேஸ்புக்கில் பலரும் கருத்து தெரிவித்தனர். திரு டான் போலி சில் புகார் தெரிவித்து இருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நேற்று குறிப்பிட்டது.

வெள்ளைநிற கார் ஓட்டுநரை அணுகியதற்கு முன்னதாக பல முறை ஹாரன் ஒலி எழுப்பியதாக வும் திரு டான் கூறினார்.

கார் ஓட்டுநரை திரு டான் அணுகியபோது அந்த ஓட்டுநர் காரின் கண்ணாடியைத் திறந்தார். அப்போது மதுபான வாடை வந் தது என்றும் வெள்ளை நிற காரை ஓட்டி வந்தவருக்கு சுமார் 40 வயது இருக்கலாம் என்றும் திரு டான் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!