அன்னையர் பெயர் சூடும் ஆர்க்கிட் மலர்

அன்னையர் பெயர் சூடும் ஆர்க்கிட் மலர்

2 mins read
0189d084-14e6-4e92-9170-4a9fb217f07d
அன்னையரைச் சிறப்பிக்கும் மசெகவின் நிகழ்ச்சியில் அமைச்சர் ஜோசஃபின் டியோ, பிரதமர் லீ இருவரும் அன்னையர் பெயர் சூட்டப்பட்ட ஆர்க்கிட்  மலரை  நாட்டுக்கு அர்ப்பணித்தனர். படம்: சாவ் பாவ் -

நாட்டு உருவாக்கத்திற்கு அன் னையர்கள் ஆற்றியுள்ள தொண்டுகளுக்கு நன்றி கூறும் வகையிலும் அவர்களைப் பாராட்டி சிறப்பிக்கும் வகையிலும் மக்கள் செயல் கட்சி மகளிர் அணி ஆர்க்கிட் மலருக்கு தாய்மார் களின் பெயர் சூட்டி அழகு பார்க் கிறது.

அன்னையர் தினத்தைக் குறிக்கும் வகையில் சிங்கப்பூரில் உள்ள மாதர்களின் நலன் நாடும் 10 அறப்பணி அமைப்புகளுக்கு மசெக சமூக அறநிறுவனத்தின் மூலம் $200,000 நன்கொடை வழங்கப்பட்டது.

சிங்கப்பூரின் 200வது ஆண்டையொட்டி மசெக மகளிர் அணியின் அன்னையர் பாராட்டு விழா நிகழ்ச்சி நேற்று நடந்தது.

மண்டரின் ஆர்ச்சர்ட் ஹோட்ட லில் நடந்த அந்த நிகழ்ச்சியில் பிரதமர் லீ சியன் லூங் ஆர்க்கிட் மலரை பொதுமக்களுக்கு அர்ப் பணித்தார்.

ஊதா நிறத்தைக் கொண்ட ஆர்க்கிட் மலருக்கு 'அரண்டா சிங்கப்பூர் அன்னையர்கள்' என்று பெயர் சூட்டப்பட்டது. அந்த மலர் 19ஆம் நூற்றாண்டிலிருந்து சிங் கப்பூருக்கே உரியதாக இருக்கும் ஒரு தாவர குடும்பத்தில் தொன்று தொட்டு தோன்றி வருவதாகும்.

நேற்றைய நிகழ்ச்சியில் 600க் கும் மேற்பட்ட தொண்டர்களும் விருந்தினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மனிதவள அமைச்சரும் மசெக மகளிர் அணித் தலைவருமான திருவாட்டி ஜோசஃபின் டியோ, முக்கியமான தலைவர்களின் பெயர்கள் ஆர்க்கிட் மலருக்குச் சூட்டப்படுவது வழக்கம் என்றார்.

இப்போது சிங்கப்பூரில் உள்ள தாய்மார்கள் அனைவரும் தாங் கள் மிக முக்கியமானவர்கள், சிறப்புத் தன்மைமிக்கவர்கள் என் பதை உணர்ந்துகொள்ளும் வகை யில் இந்த ஆர்க்கிட் மலர் மூலம் பெருமை அடையலாம் என்று நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

சமூகத்திற்குக் குடும்பங்களே அடிப்படை என்ற அவர், சிங் கப்பூரின் வரலாற்றுக்கு தாய்மார் கள் பெரும் தொண்டாற்றி இருக் கிறார்கள் என்றார்.

போருக்குப் பிறகு நாட்டை மீண்டும் உருவாக்குவதில் மாதர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார். ஆர்க்கிட் மலரை தேசத்துக்கு அர்ப்பணித்தபோது பேசிய திரு லீ, நிகழ்ச்சிக்கு வந்த அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்து தெரிவித்தார்.