மின்தூக்கிகள், கூரையுடன் கூடிய நடைபாதைகள் ஆகிய வற்றை மேம்படுத்துவதன் மூலம் மக்களின் வாழ்க்கை ஏற்றம் காணும் அதேவேளை குடியிருப் பாளர்கள் தங்களது அக்கம் பக்கத்தாருடன் வலுவான பிணைப்பை தொடர்ந்து வளர்ப் பதும் முக்கியம்.
நாடாளுமன்ற நாயகரும் மரின் பரேட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான டான் சுவான்-ஜின் இதனைத் தெரிவித்துள்ளார்.
மரின் பரேட் நகர மன்றத்தின் 30வது ஆண்டு நிறைவுக் கொண் டாட்டத்தின் தொடர்பில் நடத்தப் பட்ட கேளிக்கை நிகழ்வில் அவர் நேற்று கலந்துகொண்டார்.
மரின் பரேட் குடியிருப்பாளர் கள் ஒன்றுசேர்ந்து பணியாற்றி தங்களது பேட்டையை நிர்வகிக் கும் நோக்கில் கடந்த 1989ஆம் ஆண்டு மரின் பரேட் நகர மன்றம் தோற்றுவிக்கப்பட்டது.
கொண்டாட்ட நிகழ்வுகளில் மரின் பரேட் குழுத் தொகுதியின் சக நாடாளுமன்ற உறுப்பினர் களான கோ சோக் டோங், சியா கியன் பெங், மவுண்ட்பேட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் பியவ் சுவான் ஆகியோருடன் திரு டான் இணைந்து பங்கேற் றார்.
மேலும் திரு சான், "நாட்டு நிர்மாணம் பற்றி பேசுகையில் அது பெரியதொன் றாகத் தோன் றும். இருப்பினும் அடித்தள அமைப்பிலிருந்துதான் அது தொடங்குகிறது.
"மக்களை நாடிச் செல்கை யில் உதவி தேவைப்படும் வசதி குறைந்தோரின் பிரச்சினைகளை முன்கூட்டியே அடையாளம் காண முடிகிறது. அதன்மூலம் சீக்கி ரமே இந்த விவகாரத்தில் தலை யிட முடிகிறது.
"மரின் பரேட் பகுதியில் மட்டுமல்ல; நாடு முழுக்க உள்ள நிலவரம் இது," என்றார் திரு சான்.
புளோக் 84ல் உள்ள மரின் பரேட் சென்ட்ரல் சந்தை மற்றும் உணவு நிலையம் புதுப்பிப்புப் பணிகளுக்காக கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்டது. இம் மாதத் தொடக்கத்தில் அது மீண்டும் தனது வர்த்தகத்தைத் தொடங்கியது.
அது அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டதற்காக அறிவிப்புப் பலகையை நாடாளுமன்ற உறுப் பினர்கள் திறந்துவைத்தனர். தொடர்ந்து புளோக் 78 மரின் டிரைவ் அருகில் உள்ள திறந்த வெளியில் கேளிக்கை நிகழ்வு கள் அரங்கேறின. எராளமான குடியிருப்பாளர்கள் அவற்றில் கலந்துகொண்டனர்.
சந்தையிலும் உணவு நிலை யத்திலும் மேற்கொள்ளப்பட்ட மேம்பாடுகள் குடியிருப்பாளர்கள் அதிகம் நாடும் வகையில் அமைந் துள்ளதாகவும் குறிப்பாக வயது முதிர்ந்தவர்களுக்கு வசதியாக இருப்பதாகவும் திரு டான் தெரி வித்தார்.
"பேட்டையையும் சுற்றுச் சூழலையும் மேம்படுத்துவதை நாம் தொடரும்போது இங்கு வசிக்கும் மக்களின் தொடர்பை வளர்ப்பதிலும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னேற்றம் காணவேண்டும்," என்றும் அவர் கூறினார்.
நகர மன்றம் புகைப்படத் திட்டம் ஒன்றையும் தொடங்கி உள்ளது.
மரின் பரேட் குடியிருப்பாளர் கள், வெவ்வேறு சமூகங்களின் ஒற்றுமை போன்றவற்றை உணர்த் தும் கருப்பொருள் அடங்கிய புகைப்படங்களை பொதுமக்கள் அனுப்பி இத்திட்டத்தில் பங்
கேற்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் படங்கள் இவ்வாண்டில் பின்னர் நிகழவிருக்கும் கேளிக்கைகளில் காட்சிக்கு வைக்கப்படும்.