ஹைஃபிளக்ஸ் நிறுவனத்தில் முதலீடு; யுடிகோ விருப்பம்

ஹைஃபிளக்ஸ் நிறுவனத்தில் முதலீடு; யுடிகோ விருப்பம்

1 mins read
0c9935cc-404f-4b24-ad98-93a6d97ff80f
-

ஐக்கிய அரபு சிற்றரசின் பொதுப் பணித் துறை நிறுவனமான யுடிகோ, நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் சிங்கப்பூர் ஹைஃபிளக்சில் முதலீடு செய் வதற்கான கட்டுப்படுத்தும் விருப்ப ஒப்பந்தத்தை தாக்கல் செய்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக ஹைஃபிளக்சுக்குத் தேவையான முதலீடுகளை வழங் கவும் அவசர நிதியுதவி வழங்க வும் யுடிகோ தயாராக இருப்பதாக யுடிகோவின் தலைமை நிர்வாகி ரிச்சர்ட் மெனசெஸ் நேற்று தெரி வித்தார். இம்மாதத் தொடக்கத் தில் யுடிகோ, கட்டுப்படுத்தாத ஹைஃபிளக்சில் முதலீடு செய் வதற்கான விருப்பக் கடிதத்தை தாக்கல் செய்திருந்தது.

கடந்த சில மாதங்களாக நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஹைஃபிளக்ஸ் நிறு வனத்தின் எதிர்காலம் கேள்விக் குறியாகி யுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.