சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழக விடுதியில் உள்ள குளியல் அறையில் மாணவியைப் படம் பிடித்ததாகக் கூறப்படும் சம்பவத் தில் மாணவரை காவல் துறை யினர் கைது செய்துள்ளனர்.
ராஃபிள்ஸ் ஹாலில் நடை பெற்ற சம்பவம் தொடர்பில் போலிசாருக்குப் புகார் அளிக்கப் பட்டது. உடனே சந்தேக நபரை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர் என்று என்யுஎஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். சனிக்கிழமை காலை 8.10 மணியளவில் அழைப்பு வந்ததாகவும் இதை யடுத்து அதே விடுதியில் வசிக் கும் 26 வயது என்யுஎஸ் மாண வர் ஒருவர் அத்துமீறி நுழைந்த தற்காக கைது செய்யப்பட்டதாக வும் போலிசார் தெரிவித்தனர்.
விசாரணையில் காவல் துறைக்கு உதவி வருவதாகக் கூறிய என்யுஎஸ் பேச்சாளர், தேவையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பாதிக்கப்பட்ட மாணவிக்குத் தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.
கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து மேம்பட்ட கண்காணிப்புக் கேம ராக்கள் மூலம் பல்கலைக்கழ கத்தின் பாதுகாப்பு வலுப்படுத்தப் பட்டு குளியல் அறை, தாழ்ப் பாள்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. சுற்றுக்காவலும் அதிகரிக்கப் பட்டுள்ளது என்று பேச்சாளர் சொன்னார்.
ஏப்ரல் மாதத்தில் என்யுஎஸ் இளநிலை பட்டப்படிப்பு மாணவி யான மோனிக்கா பே, கடந்த ஆண்டு நவம்பரில் தாம் குளிக்கும்போது படம் பிடித்த மாணவர் மீது கடுமையான நட வடிக்கை எடுக்கவில்லை என்று கூறி சமூக ஊடகத்தில் தமது வருத்தத்தை வெளிப்படுத்தி யிருந்தார். இவரது பதிவு அதிவேகத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் தனது ஒழுங்கு நடவடிக்கைகளை மறுபரி சீலனை செய்ய வேண்டிய அவ சியம் ஏற்பட்டது.

