மீண்டும் எஸ்ஐஏயின் இடைவிடா சேவை

மீண்டும் எஸ்ஐஏயின் இடைவிடா சேவை

1 mins read
7bce8ac3-4352-4cce-a8d9-03e8e46bd32b
(படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்) -

சிங்கப்பூர் ஏர்லைன்சின் அமெரிக்காவுக்கான இடைவிடா சேவை ஆறு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது.

நியூயார்க் அருகே உள்ள நியூவார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய நகரங்களுக்கு சலுகை விலை யில் சேவைகளை வழங்க எஸ்ஐஏ முன்வந்துள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத் துக்கான கட்டணம் 1,498 வெள்ளியிலிருந்து தொடங்கும். வரும் செப்டம்பரில் தொடங்கும் சியாட்டல் நகரத்துக்கான கட் டணம் 1,598 வெள்ளியாக இருக் கும்.

நியூவார்க் சென்று வருவதற் கான எஸ்ஐஏ விமான சேவையின் கட்டணம் 1,758 வெள்ளி.

இந்த சிறப்புக் கட்டணத்துடன் இடைவிடாமல் சேவை வழங்கப் படுவதால் அதிக நேரம் மிச்ச மாகிறது.

இதனால் அதிகமான பயணிகள் இடைவிடா சேவையை விரும்புகின்றனர்.