சிங்கப்பூர் முன்னோடிகளை சிறப்பிக்கும் ஓவியங்கள்

சிங்கப்பூர் முன்னோடிகளை சிறப்பிக்கும் ஓவியங்கள்

1 mins read
c3c33bd1-cd0e-4538-8e9b-97c80502d63e
நேற்று 'எஸ்ஜிகேர்ஸ்' நிகழ்வில் பங்கேற்றவர்களுடன் உரையாடிய (இடமிருந்து 2வது) நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின். படம்: லியான்ஹ வான்பாவ்  -

சிங்கப்பூரின் 200வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் விதமாக நேற்று கிட்டத்தட்ட 600 பேர் ஒன்றுகூடி களிமண்ணிலும் செராமிக் கற்களிலும் சிறிய அள விலான மாதிரி ஓவியங்களை வடிவமைத்தனர்.

சிங்கப்பூரை நிர்மாணிக்க உதவிய சிங்கப்பூர் முன்னோடி களையும் முன்னோடி நிறுவனங் களையும் சிறப்பிக்கும் வகையில் இவர்கள் நான்கு பகுதிகளாக உருவாக்கப்படும் ஓவியத் திட்டத்தின் இரண்டாம் தொகுப்பை நேற்று உருவாக்கினர்.

'எஸ்ஜிகேர்ஸ்' எனும் இந்த ஓவியத் தொகுப்பின் தலைப்பில் நமது பராமரிப்பு கலாசாரத்தை கொண்டாடுகிறோம் என்ற கருப் பொருளில் நாட்டின் சுகாதாரத் துறை, கல்வி, இளையர் மேம்பாடு ஆகியவற்றுக்கு அடித்தளம் அமைத்தவர்கள் இந்த ஓவியங்கள் மூலம் சிறப்பிக்கப்பட்டனர்.