அன்னையர் தினம்; போற்றி வாழ்த்திய அதிபர், பிரதமர் மற்றும் அமைச்சர்கள்

அன்னையர் தினம்; போற்றி வாழ்த்திய அதிபர், பிரதமர் மற்றும் அமைச்சர்கள்

2 mins read
b7010a65-4bb9-4449-a412-fae34a0f12df
வேலையையும் கைவிட்டு முழு நேரமும் மகளை கவனிக்கும் திருமதி ஜாஸ்மின் லீ ஜின் ஸுவானின் அர்ப்பணிப்பு உணர்வை அதிபர் ஹலிமா யாக்கோப் பாராட்டினார். படம்: ஹலிமா யாக்கோப் ஃபேஸ்புக் -

அன்னையர் தினத்தையொட்டி அதிபர் ஹலிமா யாக்கோப், பிர தமர் லீ சியன் லூங் உட்பட பலரும் அன்னையர்களைப் போற்றி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

அதிபர் ஹலிமா சனிக்கிழமை இரவு ஃபேஸ்புக்கில் வெளியிட்ட தகவலில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமல்லாமல் அளவிலா அன்பு, அர்ப்பணிப்பு, பராமரிப்பு ஆகிய வற்றுக்காக அன்னையர்களை அன்றாடம் நினைத்துப் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதிபர் ஹலிமாவின் தாயார் 2015ல் மறைந்தார். ஆனாலும் தமக்கு எல்லாவற்றையும் செய்த தமது அன்னையை அவர் நன்றிப் பெருக்குடன் நினைவுகூர்ந்தார்.

எட்டு வயதில் தந்தையை இழந்ததால் தமது தாயார் ஒற்றை ஆளாக தன்னை வளர்த்து ஆளாக்கியதாக அதிபர் ஹலிமா சொன்னார்.

"வாழ்க்கையே சிரமமாக இருந்தது. சில சமயங்களில் துவண்டுவிடுவேன். ஆனால் என்னுடைய அன்னையின் மன உறுதி, விடாமுயற்சியால் வாழ்க்கை தொடர்ந்தது," என்று ஃபேஸ்புக் பதிவில் அவர் குறிப் பிட்டார்.

சில வாரங்களுக்கு முன்பு தாம் சந்தித்த இதே அன்பு, அர்ப் பணிப்பு உணர்வுடன் செயல்படும் இரண்டு அன்னையர்களையும் அவர் பாராட்டியிருந்தார்.

ஒருவர், 91 வயது சுவா பாங் சூ. இவர், அறிவுத்திறன் பாதிக்கப்பட்ட 62 வயது மகனை பராமரிப்பதிலேயே தனது ஒட்டு மொத்த வாழ்க்கையையும் கழித்த வர். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு கணவர் இறந்ததால் குடும்பப் பொறுப்பையும் சுமந்து தமது மகனையும் இவர் கவனித்து வருகிறார்.

தமக்குப் பிறகு எதிர்காலத்தில் மகனை யார் பார்த்துக் கொள் வார்கள் என்பதே திருமதி சுவா வின் தற்போதைய கவலை என்று அதிபர் ஹலிமா கூறினார்.

மற்றொருவர் திருமதி ஜாஸ்மின் லீ ஜின் ஸுவான். இவரது வயதை திருமதி ஹலிமா தெரிவிக்கவில்லை.

ஆனால் இவரும் உடற் குறை பாடு காரணமாக படுத்த படுக்கை யாகக் கிடக்கும் மகளை கண் விழியில் வைத்துப் பராமரித்து வருகிறார்.

முழு நேரமும் மகளை கவனித்துகொள்வதற்காக தனது வேலையையும் திருமதி ஜாஸ்மின் கைவிட்டுள்ளார்.

மேலும், சிறப்பு உதவி தேவைப் படும் குழந்தைகள் பற்றிய விழிப் புணர்வை ஏற்படுத்துவதற்காக 'Special Seeds Singapore' எனும் அமைப்பை சிலருடன் சேர்ந்து திருமதி ஜாஸ்மின் தொடங்கியுள்ளார்.

இவர்கள், தன்னலமின்றி தங் களுடைய சவால்களுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றனர் என்று அதிபர் ஹலிமா கூறினார்.

பிரதமர் லீ சியன் லூங்கும் அன்னையர் தினத்தையொட்டி வாழ்த்துத் தெரிவிக்கும் விதத்தில் அரண்டா ஆர்க்கிட் மலர் புகைப் படத்தை பதிவேற்றியிருந்தார்.

அண்மையில் மக்கள் செயல் கட்சி மகளிர் பிரிவின் இரு நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் அன்னையர்களை போற்றும் வகையில் ஆர்க்கிட் மலருக்கு 'அரண்டா சிங்கப்பூர் அன்னையர்' என பெயர் சூட்டப்பட்டது.

"அன்னையர்களின் எல்லை யில்லா அன்புக்கும் இடைவிடாத பொறுமைக்கும் கடின உழைப்புக் கும் இந்த ஆர்க்கிட் மலர் அர்ப் பணிக்கப்படுகிறது என்று பதி விட்ட திரு லீ, அனைத்து அன் னையர்களுக்கும் தமது வாழ்த்து களை தெரிவித்துக் கொண்டார்.

இதே ஆர்க்கிட் மலரை மனிதவள அமைச்சரும் உள்துறை இரண்டாம் அமைச்சருமான ஜோசஃபின் டியோவும் பதி வேற்றியிருந்தார்.