உள்துறை தேசிய சேவையாளர் குடும்பத்துக்கு சிறப்பு சலுகை 

'ஹோம்டீம்' எனும் உள்துறை குழுவில் இடம்பெற்றுள்ள தேசிய சேவையாளர்களின் சேவையை அங்கீகரிக்கும் வகையில் அவர் களுடைய குடும்பத்தினருக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப் பட்டுள்ளன.

தேசிய சேவையாளரின் மனைவி, தாயார் ஆகியோருக்கு குடும்பம் சார்ந்த சிறப்புச் சலுகை களுடன் இரண்டு ஆண்டுகளுக்கு 'ஹோம்டீம்என்எஸ்' மனமகிழ் மன்றத்தின் இலவச உறுப்பினர் தகுதியும் வழங்கப்படுகிறது.

தெம்பனிசில் உள்ள ஹோம்டீம்என்எஸ் மனமகிழ் மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச் சியில் 'Everyday (Her)oes' எனும் திட்டத்தை மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ அறிவித்தார்.

இதே நிகழ்ச்சியில் அன்னையர் தினமும் கொண்டாடப்பட்டது.

மனைவிகளும் அன்னையர் களும் குடும்பப் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வதால் தேசிய சேவையாளர்கள் மன நிம்மதியோடு நாட்டுக்கு சேவையாற்ற முடிகிறது. இந்த வகையில் தேசிய சேவை யாளர்களின் குடும்பத்தினர் முக்கிய பங்காற்றுகின்றனர் என்று ஹோம்டீஎன்எஸ் தலைவருமான திருமதி டியோ கூறினார்.

நாட்டுக்கு மற்றொரு வழியில் சேவையாற்றும் தனிச்சிறப்பு மிக்கவர்களுக்கு நன்றி கூறும் வகையில் இலவச உறுப்பினர் தகுதி, இதர சலுகைகள், குடும்பத் திட்டங்கள் என ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டு வருகின்றன என்று அவர் கூறினார்.

'Everyday (Her)oes' தொகுப்பில் உணவு, குளிர்பான பற்றுச் சீட்டுகள், ஹோம்டீம்என்எஸ் மன்றத்தின் வசதிகளை முன்பதிவு செய்யும் கட்டணத்தில் கழிவு போன்றவை இடம்பெற்றுள்ளன.

ஹோம்டீம்என்எஸ் மன்றத்தில் தற்போது 200,000 பேர் உறுப்பினர் களாக உள்ளனர்.

பாலஸ்டியர், புக்கிட் பாத்தோக், சைனாடவுன், தெம்பனிஸ், செம்பவாங் ஆகிய ஐந்து இடங்களில் 'ஹோம்டீம்என்எஸ்' மன்றங்கள் செயல்படுகின்றன.

தெம்பனிஸ் ஹப்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இருநூறுக்கும் மேற்பட்ட தேசிய சேவையாளர்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!