கார்களிலிருந்து பொருட்கள் திருட்டு

கார்களிலிருந்து பொருட்கள் திருட்டு

1 mins read
9f560321-5fe7-46ad-95d3-4356bb54aef4
-

சுவா சூ காங் வட்டாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களிலிருந்து பொருட்களைத் திருடிய ஓர் ஆடவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். கைதான அந்தச் சந்தேக நபருக்கு 26 வயது.

மார்ச் மாதம் 31ஆம் தேதிக்கும் மே மாதம் 3ஆம் தேதிக்கும் இடையே வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்தப்பட்டிருந்த கார்களிலிருந்து ரொக்க அட்டைகள், விலையுயர்ந்த பொருட்கள் ஆகியவை திருடப்பட்டதாகப் பல்வேறு புகார்கள் செய்யப்பட்டன. ஜூரோங் போலிஸ் பிரிவைச் சேர்ந்த போலிஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி இறுதியில் சந்தேக நபரைப் பிடித்தனர்.

திருட்டுக் குற்றம் உறுதி செய்யப்பட்டால் அந்த ஆடவருக்கு மூன்று ஆண்டு சிறை, அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.