எதிர்வரும் விசாக தின வாரயிறுதி விடுமுறையின்போது மலேசியாவுக்குப் பயணம் செய்ய எண்ணுவோர் அதிகமான போக்குவரத்து நெரிசலை எதிர்பார்க்கலாம். வரும் வெள்ளிக்கிழமை (மே 17ஆம் தேதி) முதல் அடுத்த திங்கட்கிழமை வரை ஜோகூர் பாலத்திலும் துவாஸ் இணைப்பிலும் தாமதங்களை எதிர்பார்க்கலாம் என்று குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் தெரிவித்தது.
பௌத்தர்கள் கொண்டாடும் விசாக தினம், வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறுவதால் அடுத்த வாரம் திங்கட்கிழமை பொது விடுமுறையாக உள்ளது.

