பொய்யான கோரிக்கைகளைச் சமர்ப்பித்த 'கிங்ஸ்' பல் மருந்தகம் 'சாஸ்' பங்கேற்பிலிருந்து தற்காலிக நீக்கம்

பொய்யான கோரிக்கைகளைச் சமர்ப்பித்த 'கிங்ஸ்' பல் மருந்தகம் 'சாஸ்' பங்கேற்பிலிருந்து தற்காலிக நீக்கம்

1 mins read

கோவன் வட்டாரத்தில் அமைந்து உள்ள 'கிங்ஸ்' பல் மருந்தகம் சாஸ் எனப்படும் சமூக சுகாதார உதவித் திட்டத்தில் பங்கேற்பதிலி ருந்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட தனது அறிக்கையில், "ஹவ்காங் ஸ்திரீட் 21ல் உள்ள இந்த பல் மருந்தகம் 'சாஸ்' சலுகைத் திட் டத்தின் விதிமுறைகளைக் கடு மையாக மீறியுள்ளது," என்று தெரிவித்தது.

"தனது இடத்தில் மேற்கொள் ளப்படாத பல் மருத்துவ சிகிச்சை கள் பலவற்றுக்கு இந்த மருந்தகம் பொய்யான பல கோரிக்கை

களைச் சமர்ப்பித்துள்ளது.

"நாங்கள் இந்தச் சம்பவம் தொடர்பில் போலிசில் புகார் கொடுத்துள்ளோம். இந்த மருந் தகத்தின் பல் மருத்துவர்களின் பெயர்கள் சிங்கப்பூர் பல் மருத்துவ மன்றத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள் ளன.

"சாஸ் தொடர்பான விதிமுறை களை மீறி, பொய்யான கோரிக்கை களைச் சமர்ப்பிக்கும் சம்பவங் களை சுகாதார அமைச்சு கடுமை யாக நோக்கும். அவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவ டிக்கை எடுக்கவும் அமைச்சு தயங்காது," என்றும் அறிக்கையில் குறிப்பிடப் பட்டிருந்தது.

கிங்ஸ் பல் மருத்தகம் தனது நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும். ஆனால் சாஸ் தொடர்பான கோரிக்கைகளை அது சமர்ப்பிக்க முடியாது.

சாஸ் சலுகையைப் பெற விரும் புவோர் அந்தப் பகுதியில் உள்ள மற்ற பல் மருந்தகங்களை நாடு மாறு கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.

"சுகாதாரப் பாராமரிப்பு தொடர் பான உயர் நிபுணத்துவத்தைச் சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்கள் கடைப்பிடிக்குமாறு சுகாதார அமைச்சு நினைவுறுத்தியது.