ஒத்துழைப்பை மேம்படுத்தும் நிதித் தொழில்நுட்ப உடன்பாடு

ஒத்துழைப்பை மேம்படுத்தும் நிதித் தொழில்நுட்ப உடன்பாடு

2 mins read

ஏட்டுக்கல்வி பரிமாற்றங்கள், தகவல் பரிமாற்றம், நிதித் தொழில்நுட்ப ஆய்வு ஒத்துழைப்பு ஆகியவற்றை மேம்படுத்து தல் தொடர்பிலான ஒத்துழைப்பு உடன் பாட்டில் சிங்கப்பூர் நாணய ஆணையமும் ஆசிய பசிபிக் வருங்கால நிதி ஆய்வுக் கழகமும் நேற்று கையெழுத்திட்டன.

சிங்கப்பூர், சீனா ஆகிய நாடுகளின் வர்த்தக சமூகங்கள், கல்விக் கழகங்கள், ஆய்வுக் கழகங்கள் ஆகியவற்றுக் கிடையே மேம்பட்ட ஒத்துழைப்பை வலுப் படுத்துவதே இந்த உடன்பாட்டின் நோக் கம்.

"பல துறைகளில் சிங்கப்பூரும் சீனா வும் பல்லாண்டுகளாக பங்காளிகளாகச் செயல்பட்டு வருகின்றன," என்றார் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் தலைமை நிதித் தொழில்நுட்ப அதிகாரி திரு சொப்நேந்து மொஹாந்தி.

"இந்த உடன்பாடு மூலம் சிங்கப்பூ ருக்கும் சீனாவுக்கும் இடையே நிதித் தொழில்நுட்பம் தொடர்பில் அணுக்க

மான ஒத்துழைப்பு ஏற்படும் வாய்ப்பு உள் ளது. அதன் மூலம் பயனீட்டாளர்களும் வர்த்தகங்களும் பலன் அடையலாம்.

"சீனாவில் உள்ள நிதித் தொழில்நுட்ப சமூகத்துடன் அணுக்கமாகப் பணியாற்றி அவர்களிடமிருந்து இன்னும் ஆழமான நிதி ஒத்துழைப்பு அம்சங்களை அறிந்து கொள்ள சிங்கப்பூர் ஆவலாக உள்ளது.

"அதேபோல் சிங்கப்பூரின் நிதி தொடர்பான நிபுணத்துவத்தையும் சீனா வுடன் பகிர்ந்துகொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்," என்றும் திரு மொஹாந்தி கூறினார்.

"நிதித் தொழில்நுட்ப யுகத்துக்கு இன்னும் அதிகமான அனைத்துலக தொடர்பும் ஒத்துழைப்பும் தேவைப்படு கிறது. இதன் மூலம் நிதிச் சேவைகளில் புத்தாக்க அம்சங்களைப் புகுத்த பல வழிகள் உருவாக்கப்படலாம்," என்று கருத்துரைத்தார் ஆசிய பசிபிக் வருங் கால நிதி ஆய்வுக் கழகத்தின் நிர்வாகத் தலைவர் திரு டு யான்.