சமூக அமைப்புகளுக்குஉதவும் புதிய $1 மில்லியன் மானியம்

பொதுவாக மறக்கப்பட்ட சமூக சேவை அமைப்புகளுக்கும் சமூகங் களுக்கும் ஆதரவளிக்கும் நோக் கத்தில் புதிதாக அமைக்கப்பட்டி ருக்கும் $1 மில்லியன் மதிப்பிலான மானியத் திட்டத்துக்கு விண்ணப் பிக்க அத்தகைய 50 அமைப்பு களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

'பிளெஸ் அவர் சிட்டி' அதா வது 'எங்கள் நகரை ஆசிர்வதி யுங்கள்' எனும் ஈராண்டு திட் டத்தை ஃபார் ஈஸ்ட் நிறுவனமும் மத்திய சிங்கப்பூர் சமூக மேம் பாட்டு மன்றமும் அமைத்துள்ளன.

இத்திட்டம் மூலம் முன்னாள் குற்றவாளிகளுக்கு உதவும் அமைப்புகள், மனநலப் பிரச்சினை உள்ளவர்களுக்கு உதவும் அமைப் புகள், சிறப்புத் தேவையுடையோர், வெளிநாட்டு ஊழியர்கள், பாதிக் கப்படக்கூடிய குடும்பங்கள், தனி நபர்கள் ஆகியோருக்கு உதவும்.

நடப்பில் உள்ள மற்றும் புதிய திட்டத்துக்காக விண்ணப்பிக்கும் ஒவ்வோர் அமைப்புக்கும் தனிநப ருக்கும் $20,000 வரை வழங்கப்பட லாம் என்று எதிர்பார்க்கப்படு

கிறது.

"அதிக நிதி மூலம் ஆசிர்வதிக் கப்பட்ட நாங்கள் இப்போது மற்ற வர்களையும் ஆசிர்வதிக்க விரும்பு கிறோம்," என்று நேற்று மானியத் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய ஃபார் ஈஸ்ட் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டோரத்தி சான் கூறினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தின ராகக் கலந்துகொண்டார் வர்த்தக தொழில் அமைச்சரும் மக்கள் கழ கத்தின் துணைத் தலைவருமான திரு சான் சுன் சிங்.

அவருடன், மானியத்துக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக் கப்பட்ட குடும்ப சேவை நிலையங் கள், மூளை வளர்ச்சி குன்றியோ ருக்கான பீஷான் இல்லம், பெர் தாப்பிஸ் மறுவாழ்வு இல்லம், செயின்ட் ஆண்ட்ரூஸ் ஆட்டிசம் நிலையம் போன்ற அமைப்புகளின் 26 பிரதிநிதிகளும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மத்திய சிங்கப்பூர் சமூக மேம் பாட்டு மன்றத்தின் மேயர் டெனிஸ் புவா பேசுகையில், "பொதுமக்களிட மிருந்து பெறப்பட்ட கருத்துகளை நாங்கள் கூர்ந்து கவனித்து வரு கிறோம். அதன் மூலம் சமூகத்தில் போதிய அளவில் கவனிக்கப்படாத தேவைகளை அடையாளம் கண்டு அதன் இடைவெளிகளைக் குறைக்க முற்பட்டுள்ளோம்," என் றார்.

"நடப்பில் உள்ள மற்றும் புதிய திட்டங்களுக்கு மேலும் வலு சேர்க்க இந்த மானியம் உதவும். மேலும் அந்தத் திட்டங்களின் தேவைகள் பற்றி விழிப்புணர்வை அதிகரிக்கவும் நாங்கள் ஆவன செய்வோம்," என்றும் திருவாட்டி புவா சொன்னார்.

"இது சமூக சேவைத் துறைக் கும் தனியார் துறைக்கும் இடையே ஒத்துழைப்பை மேம்படுத்தும் மத் திய சிங்கப்பூர் சமூக மேம்பாட்டு மன்றத்தின் அற்புதமான முயற்சி.

"எதிர்காலத்தில் இத்திட்டத் தின் மூலம் பல சமூக அமைப்புகள் பலன் அடைய சிறந்த வாய்ப்பு உள்ளது," என்றார் ஸ்ரீ நாராயண மிஷன் முதியோர் இல்லத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு எஸ் தேவேந்திரன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!