தனிநபர் நடமாட்டச் சாதன பயன்பாடு: மாறுபட்ட கருத்துகள்

தனிநபர் நடமாட்டச் சாதன பயன்பாடு: மாறுபட்ட கருத்துகள்

1 mins read

பாதசாரிகளுக்கு ஏற்படும் சிர மங்களைக் கருத்தில் கொண்டு நடைபாதைகளிலும் புளோக்கு களின் கீழ்த்தளங்களிலும் தனி நபர் நடமாட்ட சாதனங்களைத் தடை செய்ய வேண்டும் என கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளு மன்றத்தில் பல உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அவர்களுக்குப் பதிலளித்த போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் லாம் பின் மின் இது போன்ற தடைகளைக் கொண்டு வருவது குறித்து நகர மன்றங்கள் முடிவு செய்யலாம் என்றார்.

இதற்கிடையே இவ்விவகாரம் குறித்து குடியிருப்பாளர்களின் கருத்துகளை 'த நியூ பேப்பர்' திரட்டியது.

அதிகளவில் தனிநபர் நட மாட்டச் சாதனங்கள் பயன்படுத்தப் படும் பகுதிகளில் ஒன்றான தோ பாயோவில் சிலர் தடையை ஆத ரித்தும் எதிர்த்தும் வெவ்வேறு மாதிரியாகக் கூறினர்.

சில்லரை விற்பனைக் கடை ஊழியரான எலிஸ் கோ, 54, என் பவர் தடையை ஆதரித்துக் கூறு கையில், "மின்ஸ்கூட்டர் போன்ற தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் மிக வேகமாகச் செல்கின்றன. ஆனால், இந்தப் பேட்டையில் வயது முதிர்ந்தோர் பலர் நடமாடும் போது அந்த சாதனங்களின் ஒலி களைக் கேட்க இயலாமற்போக லாம். மேலும் அவற்றுக்கு வழிவிட ஒதுங்குவதற்கு மூத்த குடிமக்கள் அதிக நேரம் எடுத்துக்கொள்ள லாம்," என்றார்.

அதேசமயம், "பாதசாரிகளின் நடைபாதையில் தடை விதித்தால் மின்ஸ்கூட்டர் ஓட்டிகள் எங்கே செல்வார்கள்?," என்று தடைக்கு எதிராகக் கருத்துக் கூறினார் கிறிஸ் சூ. 65, என்பவர்.

இந்நிலையில், இச்சாதனங் களுக்காக தனி பாதை அமைக் கலாம் என்றும் சிலர் கூறினர்.