சமூக சேவைத் திட்டத்தின் தொடர்பில் வியட்னாம் சென்ற சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழக மாணவர்கள் 20 பேர் அங்கு ஏற் பட்ட சாலை விபத்தில் காயமுற்றனர்.
கடந்த சனிக்கிழமை இச்சம்ப வம் நிகழ்ந்தது. மாணவர்கள் பயணம் செய்த பேருந்து சாலை ஓரத்தடுப்பில் மோதியது.
அதனைத் தொடர்ந்து மாண வர்கள் தங்களது இருக்கைகளி லிருந்து தூக்கி எறியப்பட்டனர்.
சமூக சேவைத் திட்டப் பணி களுக்காக மத்திய வியட்னாம் நகரான ஹுவேவுக்குச் சென்றுள்ள 30 மாணவர்கள் அடங்கிய குழு வில் இவர்கள் இடம்பெற்றிருந்தனர்.
ஏப்ரல் 28ஆம் தேதி முதல் அந்நகரில் திட்டப் பணியாற்றிய மாணவர்கள் கடந்த வியாழக் கிழமை அதனை நிறைவு செய் தனர்.
அதன் பின்னர் வெள்ளி, சனிக்கிழமைகளில் நடைபெற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இரண்டு பேருந்துகளில் மாணவர்கள் சென்றபோது அதில் ஒரு பேருந்து விபத்தில் சிக்கி யதாக பல்கலைக்கழகம் நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
காயமுற்ற 20 பேரும் உடனடி யாக உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட் டனர். பின்னர் அவர்கள் உள்ளிட்ட 30 பேரும் ஹுவே சென்ட்ரல் அனைத்துலக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டனர்.
பெரும்பாலானோருக்கு சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்ட நிலையில் சிலருக்கு மணிக்கட்டு முறிவு, கால் எலும்பு முறிவு, கழுத்துக் காயம் போன்றவை ஏற் பட்டதாக அறிக்கை குறிப்பிட்டது.
மாணவர்களுக்கு நேரடி மருத் துவ உதவி வழங்கும் பொருட்டு ஐஎஸ்ஓஎஸ் மருத்துவக் குழுவும் பல்கலைக்கழகத்தின் இரு ஊழி யர்களும் நேற்று முன்தினம் வியட் னாம் விரைந்ததாகவும் அது தெரி வித்தது.
வியட்னாமில் உள்ள பல்கலைக் கழகப் பணியாளர்கள் சிங்கப்பூர் தூதரகத்துடன் தொடர்பில் உள் ளனர். காயமுற்ற சிங்கப்பூர் மாண வர்களுக்கு தூதரக உதவிகளை வழங்கவும் உள்ளூர் அதிகாரி களுடன் கலந்து பேசவும் ஹுவே நகருக்கு இரு அதிகாரிகளை தூதரகம் அனுப்பி வைத்துள்ளது.
இந்நிலையில் விபத்தில் காய மின்றி தப்பிய மூன்று மாணவர்கள் நேற்று முன்தினம் திட்டமிட்டபடி சிங்கப்பூர் திரும்பினர்.

