எச்ஐவி தகவல் கசிவு; மிக்கி புரோச்செஸின் வழக்கறிஞர் விலகல்

எச்ஐவி தகவல் கசிவு; மிக்கி புரோச்செஸின் வழக்கறிஞர் விலகல்

1 mins read
8c4d812b-2ba8-4cd7-ba8e-d230f93cdded
-

எச்ஐவி தரவுத்தள கசிவுடன் தொடர்புடைய அமெரிக்கர் மிக்கி ஃபரேரா புரோச்செஸின் வழக்கறிஞர் விலகியுள்ளார். 34 வயது புரோச்செஸ் தம்மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்தியது இதற்குக் காரணம் என்றார் அவரது வழக்கறிஞர் ஜான் ஓக்லி.

புரோச்செஸுக்கும் தமக்கும் வேறுபாடுகள் இருந்ததாகத் திரு ஓக்லி 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழிடம் தெரிவித்தார். "என்ன நடந்தது என்பதை நான் விவரிக்கப்போவதில்லை. எங்களுக்குள் மோதல் ஏற்பட்டது. அன்று முதல் அவரைப் பிரதிநிதிக்க விரும்பவில்லை," என்று அவர் கூறினார்.

சிங்கப்பூரிலிருந்து திருடப்பட்ட ஆவணங்களை வைத்திருப்பது, அதனைக் கொண்டு மிரட்டி பணம் வாங்க முயல்வது ஆகியவற்றின் தொடர்பில் புரோச்செஸ் மூன்று குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.

தற்போது புரோச்செஸை அடேல் பர்ட் பிரௌன் என்ற வழக்கறிஞர் பிரதிநிதிக்கிறார்.