சுடச் சுடச் செய்திகள்

பாசிர் ரிஸ்ஸில் விபத்து; சைக்கிளோட்டிகள் காயம்

பாசிர் ரிஸ் வட்டாரத்தில் இரு சைக்கிள்களும் ஒரு காரும் மோதிய விபத்தில் காயமடைந்த சைக்கிளோட்டிகள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

பாசிர் ரிஸ் டிரைவ் 6ல் நடந்த இந்தச் சம்பவம் குறித்து கிட்டத்தட்ட 6.30 மணிக்குத் தகவல் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர். ஓட்டுநர்களில் ஒருவருக்கு 19 வயது; மற்றொருவருக்கு 25 வயது. அவ்விருவருமே சுயநினைவுடன் சாங்கி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

கார் நிறுத்துமிடத்திலிருந்து சாலைக்குள் சைக்கிள்கள் வளைந்து செல்லும்போது விபத்து ஏற்பட்டதாக ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழ் தெரிவித்தது. சைக்கிளோட்டிகள் கடுமையாகக் காயமடையவில்லை எனக் கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பில் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon