ஜூவல் சாங்கி மின்படிக்கட்டுகளில் சிறுவன் காயம்

ஜூவல் சாங்கி விமான நிலையத்தில் சிறுவனின் செருப்பு மின்படிக்கட்டுகளில் சிக்கிக்கொண்டதில் அவனது கால் விரலில் சிறு காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்தில் இருந்த மருத்துவர் ஒருவர் அந்தச் சிறுவனுக்கு உதவி அளித்ததாக ஜூவல் நிலையப் பேச்சாளர் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை நடந்த இச்சம்பவம் பற்றிய தகவலை இரவு 9.50 மணிக்குப் பெற்றதாகக் குடிமைத் தற்காப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், சிறுவனுக்கு ஏற்கெனவே மருத்துவ உதவி அளிக்கப்பட்டிருந்ததை அறிந்தனர். அவனுக்கு மேலும் உதவி தேவைப்படாது என்றும் அவர்கள் கூறினர்.