மேம்பாலம் ஒன்றை இடிப்பதற்கான பணிகளை முன்னிட்டு உட்லண்ட்ஸ் சென்டர் ரோட்டின் ஒரு பகுதி தற்காலிகமாக மூடப்படும் என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.
இந்தப் போக்குவரத்து மூடல் புதன்கிழமை ( மே 22ஆம் தேதி) அதிகாலை 1 மணி முதல் 5.30 மணி வரை மூடப்படும்.
உட்லண்ட்ஸ் சென்டர் ரோட்டுக்கும் அட்மிரல்டி ரோட்டுக்கும் இடையிலான சாலைச் சந்திப்பு முதல் உட்லண்ட்ஸ் ரயில் சோதனைச் சாவடி வெளிவாயில் வரையிலான சாலைப்பகுதி இதனால் பாதிக்கப்படும்.
இந்தச் சாலைகளுக்கு அருகிலுள்ள அறிவிப்புப் பலகைகளைப் பார்த்து அவற்றைப் படித்து கவனமாக வாகனத்தை ஓட்டுமாறு வாகனமோட்டிகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

