குரங்கம்மை நோய்; 23 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

குரங்கம்மை நோய்; 23 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

1 mins read
6fdba25a-3478-4aa6-8e0f-06751a35390c
-

குரங்கம்மை தொற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் மொத்தம் 23 பேர் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். இவர்களில் ஐந்து பேர் சிங்கப்பூரில் வசிப்பவர்கள், மற்றவர்கள் பிரிட்டன், இந்தியா, மலேசியா, அயர்லாந்து, வியட்னாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.

குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்ட 38 வயது நைஜீரியர் பங்கேற்ற பயிலரங்கில் இவர்களும் கலந்துகொண்டதால் அந்நோய் தொற்றியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.