சர் ஸ்டாம்ஃபோர்ட் ராஃபிள்ஸ் தொடர்பான அரிய பொருட்கள்

சர் ஸ்டாம்ஃபோர்ட் ராஃபிள்ஸ் தொடர்பான பல்வேறு அரிய நினைவுப் பொருட்களை சிங்கப்பூர் தேசிய அரும் பொருளகத்துக்கு டேங் குடும்பத்தினர் நன்கொடையாக வழங்கியுள்ளனர். ராஃபிள்ஸ் தனது உறவினர் ரெவரண்ட் தாமஸ் ராஃபிள்சுக்கு எழுதிய 46 கடிதங்கள், ராஃபிள்ஸ் தனது தாயாருக்கு எழுதிய 16 கடிதங்கள் உட்பட பல முக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுப் பொருட்களை டேங் குடும்பத்தினர் சேகரித்து வைத்திருந்தனர்.

ராஃபிள்ஸ் எழுதிய ‘The History of Java’ என்ற அவர் எழுதிய புத்தகத்தின் பிரதியும் அவரது காலத்தில் ஜாவாவில் வெளியிடப்பட்ட நாணயங்கள், அவரது தலைமுடி போன்றவை அரிய பொருட்களில் சில. 2004, 2005ல் நடந்த விற்பனைகளில் இவற்றை சிங்கப்பூரின் பிரபல வர்த்தக நிறுவனமான ‘டேங் ஹோல்டிங்ஸ்’சின் நிர்வாக தலைவர் டாங் வீ கிட் வாங்கி சேகரித்து வைத்திருந்தார். இந்தப்பொருட்களின் மதிப்பு பற்றி தெரியவில்லை.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon