பழைய கட்டடங்களுக்கு புத்துயிரூட்டும் புதிய யோசனைகள் வரவேற்பு

பழைய கட்டடங்களுக்கு புத்துயிரூட்டும் புதிய யோசனைகள் வரவேற்பு

2 mins read
96b27b0a-c07c-48f2-9cb8-4ec92d6e3dcd
-

தீயணைப்பு நிலையத்தை அடி யோடு மாற்றி புதிய உருவம் கொடுக்கும் புத்தாக்கமான யோசனைகள் உங்கள் மனதில் தோன்றுகிறதா.

அப்படியென்றால் நகர மறு சீரமைப்பு ஆணையமும் சிங்கப் பூர் நிலப் போக்குவரத்து ஆணை யமும் உங்களை ஆவலுடன் வரவேற்கக் காத்திருக்கின்றன.

ஏற்கெனவே உள்ள பழைய கட்டடங்களையும் அரசு நிலப் பகுதிகளையும் ஒப்பந்தக் குத்த கைக்கு வெளியிட்டுள்ள இரண்டு அமைப்புகளும் மறு உருவாக்கப் புத்தாக்க யோசனை களுடன் வாருங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளன.

சிங்கப்பூர் நிலப்போக்கு வரத்து ஆணையமும், நகர மறுசீரமைப்பு ஆணையமும் துடிப்புமிக்க இடமாக மாற்றும் மறுஉருவாக்கத் திட்டத்தை நேற்று அறிமுகப்படுத்தின.

வர்த்தக உரிமையாளர்கள், கட்டடக்கலை சிற்பிகள், வடி வமைப்பாளர்கள் போன்றோர் ஒரு குழுவாக இணைந்து தேர்ந் தெடுக்கப்பட்ட இடங்களில் தங் களுடைய புத்தாக்கமான வர்த்தக யோசனைகளை பரி சோதித்துப் பார்க்கலாம்.

தற்போது இரண்டு கடை வீடுகள் இந்தத் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. கம்போங் கிளாம் வரலாற்றுச் சிறப்புமிக்க வட்டாரத்தில் எண் 45 சுல்தான் கேட்டில் இரு கடைவீடுகளும் இடம்பெற்றுள்ளன.

அண்மையில் இரு கடை வீடுகளை நிலப்போக்குவரத்து ஆணையம் புதுப்பித்தது.

எண் 30 மேக்ஸ்வெல் ரோட்டில் உள்ள புக்கிட் தீமா தீயணைப்பு நிலையம், 15-31 இந்து ரோடு, ஓல்ட் காலாங் ஏர்போர்ட், மரினா பே ஆகிய நிலப் பகுதிகளும் படிப்படியாக குத்தகைக்கு வெளியிடப்படும். மூன்று ஆண்டு அடிப்படையில் குத்தகைக்கு வழங்கப்படும். பின்னர் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு குத்தகை நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது. சமூகத்தினர் கலந்துரையாடி பொதுவான எண்ணத்தைப் பகிர்ந்து கொள்வதே திட்டத்தின் இலக்கு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.