வியட்னாம் விபத்தில் சிக்கிய மாணவர்கள்  நாடு திரும்பினர்

வியட்னாமில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் சிக்கி காயம் அடைந்த சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இருபது மாணவர்களும் பாதுகாப்புடன்  நாடு திரும்பியுள்ளனர்.

சமூக சேவை ஆற்றுவதற்காக அவர்கள் வியட்னாம் சென்றிருந் தனர்.

நான்கு மாணவர்கள், ஆகாய ஆம்புலன்ஸ் மூலம் சிங்கப்பூர் திரும்பினர்.

இருவரில் ஒருவருக்கு இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டு உள்ளதாகத் தெரிகிறது. மற் றொருவருக்கு கால் எலும்பில் முறிவு ஏற்பட்டது.

இவர்கள் இருவரும் நேற்று சிங்கப்பூர் வந்து சேர்ந்தனர்.

காயம் அடைந்த மற்ற இரண்டு பேர் திங்கட்கிழமை அன்று சிங்கப்பூர் திரும்பினர். ஒருவருக்கு கழுத்திலும் மற் றொருவருக்கு கால் எலும்பில் முறிவும் ஏற்பட்டது.

நால்வரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தற்போது மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சமூக சேவையாற்றுவதற்காக வியட்னாமின் ஹுவே நகருக்கு சென்ற முப்பது மாணவர்களில் இவர்களும் அடங்குவர்.

இவர்களை ஏற்றிச் சென்ற இரு பேருந்துகளில் ஒன்று சாலையோரத் தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் இருபது மாணவர்களும் இருக் கையிலிருந்து தூக்கி எறியப் பட்டனர். கடந்த சனிக்கிழமை இந்த விபத்து நிகழ்ந்தது.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon