வீட்டில் செய்த தின்பண்டங்கள், முறுக்கு, பல வண்ண கைக் குட்டைகள், குடைகள், டீ சட் டைகள், பொம்மைகளைக் கவ்வி பிடித்துத் தூக்கும் விளையாட்டுகள் உட்பட பலதரப்பட்ட கடைகளு டனும் கேளிக்கை விளையாட்டு களுடனும் இவ்வாண்டு சிங்கப் பூர் பிரஸ் ஹோல்டிங்சின் அறப் பணி கேளிக்கைச் சந்தை களை கட்டியது.
எட்டாவது ஆண்டாக நேற்று எஸ்பிஹெச் வளாகத்தில் நடை பெற்ற கேளிக்கைச் சந்தையில் இதுவரை இல்லாத அளவுக்கு 35 கடைகள் பங்கேற்றன.
இதன் மூலம் சுமார் 31,122 வெள்ளி திரட்டப்பட்டது. இந்தத் தொகை அறப்பணிக்கு அளிக்கப் படவிருக்கிறது.
உள்ளூர் அறப்பணி அமைப்பு களைச் சேர்ந்தவர்கள் 21 கடை களை அமைத்திருந்தனர்.
எஞ்சிய கடைகளை எஸ்பி ஹெச் நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளையும் துணை நிறுவனங் களையும் சேர்ந்தவர்கள் நடத் தினர்.

