அமைச்சர் முகம்மது மாலிக்கி ஒஸ்மான்: கடற்துறையில் 'தெரியாத தெரியாதவைகள்'

அமைச்சர் முகம்மது மாலிக்கி ஒஸ்மான்: கடற்துறையில் 'தெரியாத தெரியாதவைகள்'

2 mins read
b0db3c73-039d-4dbe-86ad-7651d87b8376
சாங்கி கடற்படைத் தளத்தில் மேம்பட்ட இணையத்தளம் தொடங்கி வைக்கப்பட்ட நிகழ்ச்சியில் பேராளர்களை சந்தித்த அமைச்சர் டாக்டர் முகம்மது மாலிக்கி ஒஸ்மான். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்  -

கடற்துறை சுற்றுவட்டாரத்தில் 'தெரியாத தெரியாதவைகள்' பல உள்ளன என்று தற்காப்பு மூத்த துணை அமைச்சர் டாக்டர் முகம்மது மாலிக்கி ஒஸ்மான் தெரிவித்தார்.

அடையாளம் காண முடியாத கலன்கள், இன்னமும் கண்டு பிடிக்கப்படாத சட்டவிரோத நட வடிக்கைகள், கடத்தல் பாதைகள் உட்பட பல தெரியாத விவகாரங்கள் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

"நமக்கு அருகில் உள்ள கடற் பகுதியில் நம்முடைய பாதுகாப்புக்கு மிரட்டல் ஏற்பட்டால் எப்படியிருக் கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

"இந்தச் சூழ்நிலையில் தகவல் களைப் பகிர்வதால் தெரியாத தெரியாதவைகளில் உள்ள இடை வெளியை குறைத்துக்கொள்ள முடியும்," என்று அமைச்சர் கூறி யுள்ளார். இதற்காகவே பத்து ஆண்டு களுக்கு முன்பு சிங்கப்பூர் கடற்படையில் 'ஐஎஃப்சி' எனும் தகவல் ஒருங்கிணைப்பு நிலையம் உரு வாக்கப்பட்டது என்றார் மாலிக்கி ஒஸ்மான்.

ஆர்எஸ்எஸ் சிங்கப்பூரா சாங்கி கடற்படைத் தளத்தில் புதுப்பிக்கப் பட்ட தகவல் பகிர்வு இணையத் தளத்தை தொடங்கி வைத்து நேற்று அவர் உரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் நாற்பது நாடுகளைச் சேர்ந்த கடற்படைத் தளபதிகள், கடலோரக் காவல் படையின் உயர் அதிகாரிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

கடந்த 2009 ஏப்ரல் மாதத்தில் நாடுகளுக்கு இடையே கடற்துறை பாதுகாப்பு தகவல்களை பகிர்ந்து கொள்ள சாங்கி கடற்படைத் தளத்தில் தகவல் ஒருங்கிணைப்பு நிலையத்தை சிங்கப்பூர் குடியரசு கடற்படை உருவாக்கியது.

இதன் ஒரு பகுதியாக புதிய அடுத்த தலைமுறைக்கான மேம் பட்ட இணையத்தளத்தில் ஆவ ணங்கள், புகைப்படங்கள், காணொளிகள் பகிர்ந்து கொள் ளும் வசதிகள் சேர்க்கப்பட்டுள் ளன.