சிங்கப்பூரின் சமய நல்லிணக்கம் அவ்வளவு சாதாரணமாக ஏற்பட்டு விடவில்லை.
பல ஆண்டு கடின உழைப்பின் விளைவாக சமய நல்லிணக்கம் உருவாகியுள்ளது.
இதற்கு ஏற்ப வகுக்கப்பட்ட கொள்கைகள் மக்களை ஒன்று பட்டவர்களாக பிணைத்து வைத் துள்ளன.
அதிபர் ஹலிமா யாக்கோப் இதனை தெரிவித்தார்.
பெய்ஜிங்குக்கு மூன்று நாள் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு நேற்று பீப்பீள்ஸ் டெய்லி நாளேட்டுக்கு அவர் பேட்டியளித் தார்.
பல இன, பல சமய சமூகத்தை உருவாக்குவதில் சிங்கப்பூரின் அனுபவம் பற்றி அவரிடம் வினவப் பட்டது.
இதற்குப் பதிலளித்துப் பேசிய அதிபர் ஹலிமா, சிங்கப்பூர் தேசிய மயமாகும்போதே இனம், மொழி, சமயம் ஆகியவை அடிப்படை அம்சங்களாக கருதப்பட்டதை சுட்டிக்காட்டினார்.
சிங்கப்பூர் சட்டத்தின் மூலம் பல இன, பல சமய சமூகத்தை தேச நிறுவனர்கள் கட்டிக் காத்து வந்துள்ளனர்.
"அப்போது முதல் இப்போது வரை இன, மொழி, சமய வேறு பாடின்றி சிங்கப்பூரர்கள் ஒரு நாட் டின் மக்கள் என்ற உணர்வை பாடுபட்டு உருவாக்கியிருக்கி றோம்," என்று அவர் தெரிவித் தார்.
பொது வீடமைப்பு முதல் தேசிய சேவை வரையிலான கொள்கைகள் வெவ்வேறு இன, சமய, பொரு ளியல் பின்னணியைக் கொண்ட சிங்கப்பூரர்களை பாகுபாடின்றி வாழ்க்கை முழுவதும் ஒன்றாக இணைத்துவைத்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
"சமய நல்லிணக்கம் எளிதாக வந்துவிடவில்லை அல்லது ஏதோ ஒரு வாய்ப்பில் கிடைத்துவிட வில்லை, கடின உழைப்பின் மூல மாகவும் சட்டம், தகுதிக்கு முன் னுரிமை, நீதி, சமத்துவம் ஆகிய வற்றை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்பட்ட கொள்கைகள் மூல மாகவும் சமய நல்லிணக்கம் ஏற் பட்டுள்ளது," என்று அதிபர் ஹலிமா யாக்கோப் சொன்னார்.

