இன்ஸ்டகிராமில் போலி ‘லஸாடா’ இயக்கங்கள்; 14,000 வெள்ளி மோசடி

இன்ஸ்டகிராம் தளத்தில் ‘லஸாடா’ நிறுவனத்தின் போலியான இயக்கங்களால் 14,000 வெள்ளி மதிப்பிலான பணம் ஏமாற்றப்பட்டுள்ளது. அந்த இயக்கங்களைப் பற்றி போலிசார் செவ்வாய்க்கிழமை (மே 14) எச்சரிக்கை விடுத்தனர்.

இன்ஸ்டகிராம் வழியாகச் செயல்படும் ஏமாற்றுக்காரர்கள், பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புகொண்டு பரிசை வெல்வதற்கான இயக்கங்களில் அவர்களது பெயரைப் பதிவு செய்ய உதவுவதாக அவர்களிடம் கூறுவர். பாதிக்கப்பட்டவர்களிடம் அவர்களின் தொலைபேசி எண், கடன்பற்று அட்டைகளின் படங்கள், வங்கிக் கணக்கின் மறைச்சொற்கள் ஆகிய விவரங்களைப் பெற்று அந்த ஏமாற்றுக்காரர்கள் பண மோசடி செய்தனர். ‘லஸாடா’ நிறுவனத்திற்காகச் செயல்படுவதாக அந்த ஏமாற்றுக்காரர்கள் பொய்யுரைத்தனர்.

இந்த மோசடிக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று லஸாடாவின் பேச்சாளர் புதன்கிழமை தெரிவித்தார்.