மின்படிக்கட்டுகளின் புதுப்பிப்புப் பணிகளில் கால் பங்கு நிறைவு

எஸ்எம்ஆர்டியின் வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு ரயில் பாதைகளில் மின்படிக்கட்டுப் புதுப்பிப்புப் பணிகளில் கால் பங்கு நிறைவு செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

1987ஆம் ஆண்டில் எம்ஆர்டி செயல்படத் தொடங்கிய பின்னர் செய்யப்பட்ட ஆகப் பெரிய புதுப்பிப்புப் பணியான இது, 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கியது. 42 ரயில் நிலையங்களிலுள்ள 233 மின்படிக்கட்டுகளுடன் தொடர்புடைய இந்தப் புதுப்பிப்புப் பணிகளை ‘ஓட்டிஸ் சிங்கப்பூர்’ நிறுவனம் மேற்கொள்கிறது.  இதுவரை 54 மின்படிக்கட்டுகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

புதுப்பிப்புப் பணிகளில் பெரும்பகுதி 2021ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும்.