சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் பாலியல் முறைகேடுகளைக் கையாளும் முறையை மறுஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு, பாலியல் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென பரிந்துரைத்துள்ளது. அக்குழுவின் தலைவர் திருவாட்டி
கே குவோக் பல்கலைக்கழகப் பணியாளர்களுக்கும் மாணவர் களுக்கும் மின்னஞ்சல் வழியாக நேற்று அனுப்பிய சுற்றறிக்கையில் பரிந்துரைகள் தெரிவிக்கப்பட்டன.
பாலியல் முறைகேடுகளுக்கு 'இரண்டாவது முறை தவறுசெய்தால் பல்கலைக்கழகத்திலிருந்து வெளி யேற்றுவது' எனும் அணுகுமுறை யைக் கொண்டிருப்பதாகக் கடந்த மாதம் சிங்கப்பூர் தேசிய பல் கலைக்கழகம் தெரிவித்தது.
அந்தத் தண்டனை போதிய அளவுக்குக் கடுமையானதாக இல்லை என்று மாணவர்களும் பொதுமக்களும் விமர்சித்த வேளை யில் அதனை கல்வி அமைச்சர் ஓங் யி காங்கும் ஆமோதித்திருந்தார்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் அறங்காவலர் குழு உறுப்பினருமான திருவாட்டி குவோக், பாலியல் முறைகேடு களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து முழுமையாக மறுஆய்வு செய்ததாகவும் மாணவப் பிரதி நிதிகள், நிபுணர்கள் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தியதாகவும் மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்தார்.
பாலியல் முறைகேடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மாற் றியமைக்க வேண்டிய தெளிவான தேவை இருப்பதாகவும் பாலியல் முறைகேடுகள் மீண்டும் நிகழ் வதைத் தடுப்பதோடு, குற் றங்களின் கடுமையைப் பிரதி பலிக்கும் நோக்கில் தண்டனை களைக் கடுமையாக்க வேண்டும் எனவும் திருவாட்டி குவோக் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கான பிரத்தியேகப் பாதுகாப்பு அமைப்பு ஒன்றை அமைப்பது தொடர்பான பல்கலைக்கழகத்தின் பரிந்துரை யைக் குழு ஆராய்ந்து வருவதாக வும் அவர் குறிப்பிட்டார்.
சம்பவம் நடந்தது முதல் சிறப்புப் பராமரிப்பு இனிமேலும் தேவைப்படாத காலம்வரை பாதிக் கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக் கும் வகையில் அந்த அமைப்பில் பயிற்சிபெற்ற, அனுபவம்மிக்க பராமரிப்பு அதிகாரிகள் இருப்பர் என்று கூறப்பட்டது.
இணையம் வழியாக மாணவர் களிடமிருந்து கருத்துகளைப் பெறுவதற்காக சுயேச்சை ஆய்வு அமைப்பு ஒன்றை இந்தக் குழு அமைத்துள்ளது. அடுத்த மாத நடுவில் ஆய்வு முடிவுகள் மாண வர்களிடையே பகிர்ந்துகொள்ளப் படும்.
சிங்கப்பூர் நிர்வாகப் பல் கலைக்கழகத்தின் தலைவர் லிலி கோங், வோங் பார்ட்னர்ஷிப் எனும் சட்ட நிறுவனத்தின் நிர்வாகப் பங்காளி இங் வாய் கிங், சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் தலைவர் டான் எங் சை, பேராசிரியர் சான் ஹெங் சீ, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் துணைச் செயலாளர் ரிச்சர்ட் வாங் ஆகி யோர் இந்தக் குழுவின் மற்ற உறுப்பினர்கள். பேராசிரியர் சான் ஹெங் சீ வெளியுறவு அமைச்சின் பொதுத் தூதராகவும் யேல்-என்யுஎஸ் பல்கலைக் கழகத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் இருக்கிறார். சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத்தில் உள்ள கிங் எட்வர்ட் VII அரங்கத்தின் தலைவர் திருவாட்டி டே பெய் லிங், தெம்புசு காலேஜை சேர்ந்த முர்னி மரிசா மஹத் ஆகிய இரு மாணவர்களும் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
இதற்கிடையே, இத்தகைய சம்பவங்கள் நிகழ்வதைத் தடுக் கும் நோக்கில் இரவு நேர சுற்றுக் காவல் பணியில் ஈடுபடப் போவதாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மாணவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஜூன் முதல் ஆகஸ்ட் முதல் வாரம் வரையிலான காலகட் டத்தில் இந்த சுற்றுக்காவல் நடவடிக்கையை மேற்கொள்ள மாணவர்கள் சங்கம் திட்ட மிடுகிறது.

