‘கிராப்’ மோசடி: மூன்று ஆடவர்கள் மீது குற்றச்சாட்டு

கார் சேவை நிறுவனமான ‘கிராப்’ பின் ‘கிராப்ஹிட்ச்’சில் மோசடி செய்த கும்பலின் மூளையாகச் செயல்பட்ட சந்தேகத்தின் பேரில் மூன்று ஆடவர்கள் நேற்று நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்டனர். 

ரியான் வோங் வெய் ஸி, 19, சுவா வெய் பெங், 21, கென்னத் ஹோ ஹோங் வெய், 22, ஆகிய அந்த மூவர் மீதும் தலா ஒரு மோசடிக் குற்றம் சுமத்தப்பட்டது.

இவ்வாண்டின் மார்ச் மாதம் முதல் கடந்த மாதம் வரை கிராப் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தில் மோசடி செய்ய இம்மூவரும் ஒன்றிணைந்து பணியாற்றியதாகத் தெரிவிக்கப்பட் டது. 

அதன் தொடர்பில் அவர்கள் 314 மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகச் சொல்லப்பட்டாலும் அவர்கள் தங்களது சூழ்ச்சியை எவ்வாறு நிறைவேற்றினார்கள் என்று நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கவில்லை. 

இந்த மோசடி தொடர்பில் போலிசார் நேற்று முன்தினம் மாலை அறிக்கை ஒன்றை வெளி யிட்டனர். இவ்வாண்டு பிப்ரவரிக் கும் ஏப்ரலுக்கும் இடைப்பட்ட காலத்தில் 13 ஓட்டுநர்கள் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதை கிராப் கண்டறிந்தது. 

கிட்டத்தட்ட $41,800 அளவுக்கு கிராப் நிறுவனத்துக்கு இழப்பை ஏற்படுத்தும் வகையிலான 2,000 மோசடி பரிவர்த்தனைகளில் அவர் கள் ஈடுபட்டது அப்போது தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து விசா ரணையில் இறங்கிய வர்த்தக விவகாரப் பிரிவு சந்தேக நபர் களின் அடையாளங்களைத் திரட் டியது. 

அதனைத் தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை தீவு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை யில் 19 வயதுக்கும் 29 வயதுக்கும் இடைப்பட்ட 10 பேர் கைது செய் யப்பட்டனர். அவர்களில் ஒருவர் பெண்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon