பன்முகத்தன்மையே சிங்கப்பூரின் பலம் என்றும் நெகிழ்வு மிக்க சமூகமாக அது உருவாக்கப்பட்டு அண்டை நாடுகளுடன் அணுக்க உறவைக் கொண்டிருப்பதாகவும் அதிபர் ஹலிமா யாக்கோப் தெரி வித்துள்ளார்.
சீனாவுக்குப் பயணம் மேற் கொண்டுள்ள அவர், நேற்று தலை நகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற ஆசிய நாகரிகங்கள் பற்றிய கலந் துரையாடல் மீதான மாநாட்டில் பங் கேற்றுப் பேசினார். ஆசிய நாடு களிடையே ஒத்துழைப்பை வளர்ப் பதற்கான உச்சநிலை மாநாடாக இது நடத்தப்படுகிறது.
இன, சமய நல்லிணக்கத்தை வளர்த்து, பாதுகாக்க சிங்கப்பூர் மேற்கொண்ட முயற்சிகளை அதி பர் ஹலிமா எடுத்துரைத்தார்.
"எங்களது பன்முகத்தன்மை எங்களுக்கு வெளியே உள்ள உல கில் நிலவும் வேறுபாடுகளைப் புரிந்துகொள்ள உதவி உள்ளது. மேலும், வெவ்வேறு சமூகங்களை யும் ஒருங்கிணைத்து நல்லிணக் கத்தை ஏற்படுத்துவதில் நாங்கள் மேற்கொண்ட முயற்சிகள் மீள் திறன் சமூகமாக எங்களை உரு வாக்கி உள்ளது," என்றார் அவர்.
வெவ்வேறு சமயங்கள், நற் பண்புகள், பின்னணிகள் ஆகிய வற்றைக் கொண்ட மக்களை ஒன்றாக இணைத்து நல்லிணக் கமாக வாழவைப்பதில் உலகம் சந்தித்து வரும் பெரும் சவாலின் ஒரு நுண்ணிய உதாரணமே சிங்கப்பூரின் நிலைமை என்றும் அதிபர் ஹலிமா கூறினார்.
இதர ஆசிய நாடுகளோடு தோழமை கொள்ள உதவும் குடும்ப உறவுகள், ஒரே மாதிரி யான கலாசாரம் மற்றும் மொழி ஆகியவற்றைத் தழுவுவதும் சிங்கப்பூரின் பன்முகத்தன்மையே என்றார் அவர்.
"இருப்பினும் சிங்கப்பூர் நாடு என்றுதான் இதர நாடுகளோடு நட்புகொள்கிறோமே தவிர ஒரு சீன நாடாகவோ மலாய் நாடாக வோ அல்லது இந்திய நாடாகவோ உறவை ஏற்படுத்திக்கொள்வ தில்லை," என்று விளக்கினார் அதிபர்.
உலகத் தலைவர்கள் ஒன்று கூடிய மாநாட்டில் சிங்கப்பூர் தனது பன்முகத்தன்மையைப் பாதுகாத்து வரும் விதம் குறித்து எடுத்துரைத்தார் அவர்.

