மேம்பாட்டாளர்களால் மேற்கொள்ளப்பட்ட புதிய தனியார் வீடுகளின் விற்பனை மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த மாதம் 30.2 விழுக்காடு குறைந்தது. புதிய வீடுகளின் அறிமுகம் சற்று சரிந்ததைத் தொடர்ந்து விற்பனையும் இறங்கியது. குறிப்பாக, கடந்த மாதம் 735 எக்சிகியூட்டிவ் கொண்டோமினிய வீடுகள் விற்பனை ஆயின.
அந்த எண்ணிக்கை மார்ச் மாதத்தில் 1,054 ஆக இருந்ததாக நகர மறுசீரமைப்பு ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது. அதேபோல மார்ச் மாதத்தில் 1,812 வீடுகள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் கடந்த மாதம் அதன் எண்ணிக்கை 444 வீடுகளாக இருந்தது. இது கிட்டத்தட்ட 75.5 விழுக்காடு குறைவு ஆகும்.

