சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்க இணையத்தளம் ஊடுருவல்

சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்க இணையத்தளம் ஊடுருவல்

1 mins read
942dbac8-39d1-43d0-ae57-c73e27af5fbc
-

சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் இணையத்தளம் ஊடுருவப்பட்ட சம்பவத்தில் 4,000 தனிநபர்களின் தனிப்பட்டத் தகவல்கள் கசிந்துள்ளன.

சிங்கப்பூரின் சுகாதாரத்துறையைச் சேர்ந்த அமைப்புகளுக்கு ஏற்பட்ட பல்வேறு இணைய ஊடுருவல்களில் இது ஆக அண்மையானது. ரத்த தானம் செய்வதற்காக மக்களைச் சேர்க்கும் இணையத்தளத்தின் ஒரு பகுதி ஊடுருவலால் பாதிப்புக்குள்ளானதாகச் செஞ்சிலுவைச் சங்கம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. இந்தத் தளத்தின் வழியாக பொதுமக்கள், ரத்த தானத்தைச் செய்ய விண்ணப்பிக்க முடியும். செஞ்சிலுவைச் சங்கம் அவர்களின் விண்ணப் பத்தைப் பரிசீலித்து விண்ணப்பதாரர்களின் சௌகர்யத்திற்கு ஏற்ற இடத்தையும் நாள் மற்றும் நேரத்தையும் ஒதுக்கும்.

இந்த ஊடுருவல் சம்பவத்தில் 4,297 பேரின் பெயர்கள், தொடர்பு எண்கள், மின்னஞ்சல் முகவரிகள், ரத்த வகை உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் கள்ளத்தனமாக வெளியிடப்பட்டன. பாதிக் கப்பட்ட தனிநபர்களைத் தொடர்புகொள்ள ஆரம்பித்துள்ளதாக சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் மன்னிப்பு கேட்பதாக சங்கத்தின் தலைமை நிர்வாகி பெஞ்சமின் வில்லியம் தெரிவித்தார்.