கடன் முதலை தொல்லை; ஆடவர் கைது

கடன் முதலை தொல்லை; ஆடவர் கைது

1 mins read
0ef45a25-9e98-48e4-be6e-1cbebb4779a7
-

கடன் முதலை நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 35 வயது ஆடவர் ஒருவரை போலிஸ் நேற்று முன்தினம் கைது செய்தது. ரெட்ஹில் லேனில் உள்ள ஒரு வீட்டில் சாயம் தெளிக்கப்பட்டது, கதவில் நாசவேலை செய்யப்பட்டது குறித்து கடந்த செவ்வாய்க்கிழமை போலிசுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

போலிஸ் கண்காணிப்புக் கருவிகளின் உதவியுடன் அதிகாரிகள் தீவிர விசாரணையை நடத்தியதையடுத்து சம்பந்தப்பட்ட அந்த ஆடவரின் அடையாளம் உறுதி செய்யப்பட்டது. தீவு முழுவதும் நிகழ்ந்ததாக கூறப்படும் இது போன்ற கடன் முதலை நடவடிக்கைகளில் அந்த ஆடவர் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது. இன்று நீதிமன்றத்தில் அவர்மீது குற்றம் சுமத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.