சுடச் சுடச் செய்திகள்

பொதுத்துறை அதிகாரிகளிடம் முறைகேடாக நடந்ததாக கூறப்படும் அறுவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பொதுத்துறை அதிகாரிகளிடம் முறைகேடாக நடந்ததாகக் கூறப் படும் ஆறு சிங்கப்பூரர்கள் மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சாட் டப்பட்டது. சிங்கப்பூர் போலிஸ் படை, தேசிய பூங்காக் கழகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் அவர்களால் வெவ்வேறு சம்பவங்களில் தாக்கப் பட்டனர்.

குல்பிர் சிங் ரக்பிர் சிங் விஜில் என்ற 28 வயது நபர் மீதே ஆக அதிகமாக ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவற்றில் ஒன் றில், இவ்வாண்டு ஜனவரி 1ஆம் தேதி, டான் டோக் செங் மருத்துவ மனையின் உடல்நிலை சோதனை அறையில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் அதிகாரி சார்ஜண்ட் கூ வெய் சியேயைத் தாக்கினார் குல்பிர். தமது தலை யால் சார்ஜண்ட் கூவின் முகத்தில் குல்பிர் முட்டியதில் கூவின் உதட்டில் காயம் ஏற்பட்டது. 

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு மார்ச் மாதம் வரை குல்பிரின் இதர குற்றச்செயல் கள் நிகழ்ந்தன.

நவம்பர் 14ஆம் தேதி, சின் மிங் ரோட்டில் உள்ள புளோக்கின் 14வது மாடியிலிருந்து குல்பிர் ஒரு பூந்தொட்டியை கீழே வீசி எறிந்

தார். ஒரு மாதம் கழித்து அவர் மாது ஒருவரிடமிருந்து கைபேசி ஒன்றைத் திருடினார்.

பிப்ரவரி 2ஆம் தேதி மேரி மவுண்ட் எம்ஆர்டி நிலையத்தில் குல்பிர் குடித்துவிட்டு முறைதவறி நடந்தார். குல்பிர் நேற்று $10,000 பிணையில் விடுவிக்கப்பட்டார். அவர் அடுத்த மாதம் 10ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னி லையாவார். 

இரண்டாவது நபரான 38 வயது ரந்திர் நேரு மூன்று குற்றச் சாட்டுகளை எதிர்நோக்குகிறார். ஜனவரி 4ஆம் தேதி அவர் சவுத் பிரிட்ஜ் ரோட்டில் உள்ள புத்தா ரூத் ரெலிக் கோயிலில் போலிஸ் அதிகாரியான சார்ஜண்ட் கோ வெய் சியாங்கை கன்னத்தில் உதைத்ததுடன் தகாத வார்த்தை களால் திட்டினார். 

ரந்திருக்கு $10,000 பிணை வழங்கப்பட்டது. அவர் இம்மாதம் 31ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத் தில் முன்னிலையாவார். 

பொதுத் துறை அதிகாரிகளைத் தாக்கிய குற்றம் நிரூபிக்கப்பட்டால் இந்த அறுவருக்கும் ஏழு ஆண்டு வரையிலான சிறை, அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டது. 

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon