சுடச் சுடச் செய்திகள்

ஆகாயப் போக்குவரத்து நிர்வாகம் மேம்படுத்தப்படும்

சாங்கி விமான நிலையத்தின் ஆகாயப் போக்குவரத்து நிர்வாக முறையை மேம்படுத்தவும் உயர்தர பாதுகாப்பையும் செயல்திறனையும் உறுதிசெய்ய  இன்னும் பல வசதிகளை அறிமுகப்படுத்தவும் அடுத்துவரும் பத்தாண்டுகளுக்கு மேற்பட்ட காலத்தில் பல பில்லியன் வெள்ளி செலவழிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நேற்று நடைபெற்ற சீன ஆகாயப் கோக்குவரத்து மேம்பாட்டு கருத் தரங்கில் உரை நிகழ்த்திய போக்கு வரத்து அமைச்சர் கோ பூன் வான், இதனைத் தெரிவித்தார். 

தற்போதைய ஆகாயப் போக்கு வரத்து நிர்வாக முறை $300 மில்லியனுக்கும் அதிகமான செலவில் 2013ஆம் ஆண்டு அறி முகம் கண்டதாக அவர் கூறினார்.

“தேவைக்கேற்ப இல்லாத நிலையைத் தவிர்க்கவே அடுத்த தலைமுறை ஆகாயப் போக்கு வரத்து நிர்வாக முறையை உரு வாக்க நாங்கள் தொடங்கி விட்டோம்,” என்று திரு கோ கூறினார்.

ஆகாயப் போக்குவரத்து நெரி சல் அடைந்துவரும் வேளையில், அதன் பாதுகாப்பை உறுதிசெய்ய இந்த மேம்பாடுகள் அவசியம் என்று திரு கோ வலியுறுத்தினார்.

“நெரிசல், சிக்கல் மிகுந்த ஆகாயவெளியை நிர்வகிப்பதற்கு அதிநவீன தொழில்நுட்பங்களில் பெரிய அளவிலான முதலீடு செய் வதும் தொடர் பயற்சியும் திறன் மேம்பாடும் அவசியமானவை.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon