மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோவின் பெயரைக் கொண்டு பயனீட்டாளர்களிடமிருந்து அவர்களது தனிப்பட்ட அல்லது நிதி விவரங்களைக் கோரும் பொய்யான இணையப்பக்கம் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொதுமக்களைத் திருமதி டியோ கேட்டுக்கொண்டுள்ளார்.
தம்மைச் சம்பந்தப்படுத்தி, இணையத்தளம் ஒன்றுக்கு பயனீட்டாளர்கள் அவர்களது கடன் பற்று அட்டை அல்லது வங்கி விவரங்களை அளிக்கவும் வைப்புத்தொகையைச் செலுத்துமாறும் அந்த இணையப்பக்கம் கோரியதாக திருமதி டியோ கூறினார். பொதுமக்களை ஏமாற்றி அவர்களைத் தவறாக வழிநடத்த அந்த இணைப்பக்கம் முற்படுவதாகச் அவர் சொன்னார். மக்களை நம்ப வைக்க, புதுப்பிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புச் சட்டத்தைப் பற்றிய சில உண்மையான தகவல்களைப் பொய்த் தகவல்களுடன் அந்த இணையப்பக்கம் கலந்ததாக திருமதி டியோ கூறினார்.
இணையத்தில் இதுபோன்ற பொய்யான தகவல்களை எவரும் கண்டறிந்தால் அவற்றை உடனே போலிசிடம் தெரிவிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

