பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவி; வெளிநாட்டு ஊழியர் மீது குற்றச்சாட்டு

கிராஞ்சி போர் நினைவுச் சின்னத்திற்கு அருகே பல்கலைக்கழக மாணவியைப் பாலியல் பலாத்காரம் செய்த இந்திய ஊழியர் அடுத்த மாதம் நீதிமன்றத்தில் முன்னிலையாகவேண்டும்.

மே 4ஆம் தேதியன்று டர்ஃப் கிளப் அவென்யூவுக்கு அருகே இந்தியாவைச் சேர்ந்த சின்னையா கார்த்திக் அந்தப் பெண்ணை அணுகியதாக வான்பாவ் நாளிதழ் தெரிவித்தது. தன்னைத் தற்காத்துக்கொள்ள அந்த 23 வயது பெண் முயன்றபோதும் கார்த்திக் அவரைத்  தாவரங்கள் அடர்ந்திருந்த இடத்திற்குள் வல்லந்தமாக இழுத்துச் சென்று அவருடன் வன்புணர்வில் ஈடுபட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.

சம்பவத்திற்கு மறுநாள் 21 வயது சின்னையாவை போலிசார் அவரது தங்குமிட விடுதியில் கைது செய்ததாகத் தெரியவந்தது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்