நியூசிலாந்துடன் ஒத்துழைப்பை மேம்படுத்தும் சிங்கப்பூர்

சிங்கப்பூரும் நியூசிலாந்தும் நான்கு உத்திபூர்வ அம்சங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் கூட்டு பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே 54 ஆண்டுகளாக நிலவும் அரசதந்திர நல்லுறவைக் கொண்டாடும் வகையில் இந்தப் பிரகடனம் அமைந்துள்ளது. வர்த்தகம், பொருளியல், தற்காப்பு மற்றும் பாதுகாப்பு, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம், மக்களுக்கிடையே பிணைப்புகள் ஆகியவையே இந்த நான்கு உத்திபூர்வ அம்சங்கள்.

இவையே தொடர்பான கூட்டு முயற்சிகளுக்கு வழிவகுக்கும் சிங்கப்பூர்-நியூசிலாந்து மேம்பட்ட பங்காளித்துவம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்டது. இஸ்தானா அதிபர் மாளிகையில் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கும் நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டனும் கூட்டுப் பிரகடனத்தில் கையெழுத்திட்டனர். அதற்கு முன்பு திருவாட்டி ஆர்டனுக்குச் சடங்குபூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் லீயைச் சந்தித்த முன்னர் திருமதி ஆர்டன் அதிபர் ஹலிமா யாக்கோப்பைச் சந்தித்தார்.

2018ஆம் ஆண்டு நிலவரப்படி, சிங்கப்பூரின் ஏழாம் ஆகப் பெரிய வர்த்தகப் பங்காளியாக நியூசிலாந்து திகழ்கிறது.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon