டெக் கீ தொகுதியில் வயிற்றுப் புற்றுநோய்க்கு எதிரான இலவசப்பரிசோதனை

அங் மோ கியோ குழுத் தொகுதி, செங்காங் வெஸ்ட் தனித்தொகுதி ஆகிய வட்டாரங்களில் வசிக்கும் மொத்தம் 280 முதியோருக்கு நேற்று வயிற்றுப் புற்றுநோய்க்கு எதிராக இலவசப் பரிசோதனை வழங்கப்பட்டது.

இவர்களுக்கு அந்தப் புற்று நோய் தாக்கம் இருக்குமா என் பது ஆறு வாரங்களுக்குப் பிறகு வெளிவரும் பரிசோதனையின் முடிவுகளில் தெரிந்துவிடும்.

கடந்த மாதம் அங்கீகரிக்கப் பட்ட சோதனைக் கருவியை அதிகாரபூர்வமாக முதன் முத லில் இந்த 280 பேர்தான் பயன் படுத்தினார்கள் என்பது குறிப் பிடத்தக்கது.

இப்பரிசோதனையில், முதியவ ரின் உடலிலிருந்து ஒரு சிறிய குழாயில் ரத்தம் எடுக்கப்படும். அது பின்னர் ஆய்வுக்கூடத்

துக்கு அனுப்பப்படும்.

டெக் கீ சமூக மன்றத்தில் நேற்று நடந்த இந்தப் பரிசோத னைக்கு #Checked Movement எனும் அமைப்பு ஏற்பாடு செய்தி ருந்தது.

புற்றுநோயை முன்னரே கண் டறியும் பொருட்டு, இரு தொகுதி களில் உள்ள 'துடிப்பாக மூப்படை தல்' குழுக்களுடன் இணைந்து செயல்படும் இந்த நன்கொடை அமைப்பு இந்த ஆண்டில் தொடங்கப்பட்டது.

அங் மோ கியோ குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பின ருமான பிரதமர் லீ சியன் லூங் சிறப்பு விருந்தினராக நேற்றைய பரிசோதனையைப் பார்வையிட் டார்.

பின்னர் புற்றுநோய் பரிசோ தனை பற்றி தமது ஃபேஸ்புக் பக் கத்தில் கருத்துரைத்த பிரதமர் லீ, "புற்றுநோய் குறித்த புள்ளி விவரங்கள் நமக்கு மிரட்டலாக உள்ளன. ஒவ்வொரு நாளும் 35 பேருக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வருகிறது. அவர்களில் பலர் புற்றுநோயை முன்னரே கண்டறிந்து தகுந்த சிகிச்சை பெறுவதால் உயிர் பிழைக்கின் றனர்.

"வழக்கமாக பரிசோதனைக் குச் செல்ல நான் அனைவரையும் ஊக்குவிக்கிறேன். புற்றுநோய் யாரையும் எந்த நேரத்திலும் பாதிக்கலாம். சிகிச்சையைவிட நோய்த்தடுப்பு நடவடிக்கையே மேலானது. முன்னரே நோய் பற்றி அறிந்துகொள்வது சிறந்த பலனைத் தரும்," என்று கூறி யிருந்தார்.

#Checked Movement அமைப்பின் நிறுவனர் திரு மார்க் செங் நேற்றைய நிகழ்ச்சியில் பேசுகையில், "எங்கள் அமைப்பு அரசாங்க அமைப்புகள், அடித்தள அமைப்புகள், மருத்துவ நிபுணர் கள், தொழில்நுட்பப் பங்காளிகள் ஆகியோருடன் இணைந்து பணி யாற்றி, சிங்கப்பூரர்களுக்குப் புற்றுநோய்க்கு எதிராக பரிசோத னையை வழங்க விரும்புகிறது.

"புற்றுநோய்க்கு எதிராகத் தங்களால் எதுவும் செய்ய முடி யாது என்று சிங்கப்பூரர்கள் பலர் இன்னும் நம்புகின்றனர். அதன் காரணமாக புற்றுநோய் ஓர் உயிர்க்கொல்லி என்ற தவறான எண்ணம் அவர்கள் மனதில் பதிந்துவிட்டது.

"இதனால்தான் மற்ற வளர்ந்த நாடுகளுடன் ஒப்புநோக்க சிங் கப்பூரில் புற்றுநோய் அவை முற் றிய நிலையைத் தொட்ட பிறகு தான் கண்டுபிடிக்கப்படுகின் றன," என்று விளக்கினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!